களைகட்டிய தீபாவளி கொண்டாட்டம்… கோவையில் அலைமோதிய மக்கள் கூட்டம் : பாதுகாப்பு பணியில் குவிந்த போலீசார்!!

Author: Udayachandran RadhaKrishnan
17 October 2022, 10:07 pm

கோவை மாநகர காவல் துறை சார்பில் தீபாவளி கூட்டத்தை கண்காணிக்க 750 போலீசார் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவையில் தீபாவளி கூட்டம் அதிகரித்து வருகிறது. தீபாவளிக்கு தேவையான துணி உள்ளிட்ட பொருட்களை வாங்க பொதுமக்கள் கடைவீதி பகுதிகளில் குவிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் கடைவீதி பகுதியில் உள்ள ஒப்பனக்கார வீதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.


பொதுமக்களுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்புக்கு கோபுரங்களை பார்வையிட்டார்.

  • Good Bad Ugly Hit of Flop குட் பேட் அக்லி படம் ஹிட்டா? இல்லையா? இன்னும் எவ்வளவு கோடி வசூல் செய்யணும்?