பூச்சிகளை சாப்பிட அனுமதி கேட்கும் பிரபல நாடு: அதிர்ச்சி அளிக்கும் ‘வருங்கால உணவு’.. இந்த காரணத்திற்காகவா..!

Author: Vignesh
18 October 2022, 10:05 am

சிங்கப்பூர் நாட்டில் பூச்சிகளை உட்கொள்ள அனுமதி அளிப்பது குறித்து அந்த நாட்டின் உணவுத் துறை பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

பூச்சிகளை மனிதா்கள் உணவாகக் கொள்ளவும், கால்நடைத் தீவனமாக அளிக்கவும் அனுமதிப்பது தொடா்பாக உணவு மற்றும் கால்நடைத் தீவன தொழில் துறையிடம் அரசு கருத்து கோரி உள்ளது.

இதற்கு அனுமதி கிடைத்தால் பாச்சைகள், வண்டுகள், அந்துப்பூச்சிகள், தேனீக்கள் போன்ற பூச்சி இனங்களை மனிதா்கள் உட்கொள்ள முடியும். இந்தப் பூச்சிகளை நேரடியாகவோ, எண்ணெயில் பொறித்தோ சாப்பிட முடியும் என ‘ஸ்டிரைட்ஸ் டைம்ஸ்’ நாளிதழ் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது தொடா்பான நடைமுறைகளை, பூச்சிகளை உணவாக உட்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ள ஐரோப்பிய யூனியன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் கொரியா, தாய்லாந்து போன்ற நாடுகளிடம் இருந்து சிங்கப்பூா் உணவுத் துறை பெற்றுள்ளது.

Bugs_updatenews360

‘முழுமையான அறிவியல்பூா்வ ஆய்வை மேற்கொண்டு சில குறிப்பிட்ட பூச்சி இனங்களை உணவாக உட்கொள்ள அனுமதிக்கலாம் என மதிப்பிட்டு உள்ளோம்’ என உணவுத் துறை செய்தித் தொடா்பாளா் தெரிவித்து உள்ளாா்.

அண்மைக்காலமாக மனிதா்கள் உணவாக உட்கொள்ளவும், கால்நடைத் தீவனத்துக்காகவும் வணிக ரீதியான பூச்சிப் பண்ணைகளை ஏற்படுத்துவதை ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு ஊக்குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

  • Surya Clash With Ajith அஜித்துக்கு எதிராக களமிறங்கும் சூர்யா.. ஒரு கை பார்க்க முடிவு!!
  • Views: - 708

    0

    0