காஞ்சி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையா..? அடுத்தடுத்து உயிரிழந்த நோயாளிகள்… அதிர்ச்சியில் உறவினர்கள்
Author: Babu Lakshmanan19 October 2022, 9:39 am
காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் ஒருவர் பின் ஒருவராக இரண்டு நோயாளிகள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்து விட்டதாக வெளியான தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் அருகே நத்தப்பேட்டை அடுத்த நசரத்பேட்டை பகுதியில் வசிப்பவர் கலாநிதி (64). இவர் காஞ்சிபுரம் அருகே அரசு புற்றுநோய் மருத்துவமனையில் உதவி செவிலியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு சுவாசக் கோளாறு காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த வாரம் அவருக்கு காச நோய் இருந்ததாக மருத்துவமனையில் கண்டறியப்பட்டது.
அங்கு சிகிச்சை பெற்று வந்த இவர் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த வாரம் சனிக்கிழமை அன்று அனுமதிக்கப்பட்டார். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்ற பின்னர் IMC எனப்படும் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் நேற்று மதியம் தனது பேரன் கார்த்தியிடம் உணவு வாங்கிட்டு வர கலாநிதி கூறினார். அதன் பெயரில் உணவு வாங்க செல்லும்பொழுது கலாநிதிக்கு ஆக்சிஜன் செறிவு (SpO2) 12 நிலையிலும், இதயத் துடிப்பு நிலை 100 நிலையிலும் இருந்ததால் அவர் உணவு வாங்க சென்றார். திரும்பி வந்து பார்த்த பொழுது ஆக்சிஜன் செறிவு (SpO2) 12 ன் அளவு குறைந்து 2 நிலையில் இருந்தது.
அதேபோல், இதயத்துடிப்பும் 87 அளவுக்கு இறங்கிவிட்டது. உடனே ரெகுலேட்டர் மூலம் அளவை கூட்ட முயற்சித்த போது 12 ன் அளவை அதிகப்படுத்த முடியவில்லை. உடனே செவிலியரை அழைத்து SPO2 அளவு குறைந்துவிட்டது. அதேபோல் சுவாச அளவும் 100 லிருந்து 87 ஆக குறைந்துவிட்டது என புகார் தெரிவித்தார்.
செவிலியர் சுந்தரமூர்த்தி இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. கலாநிதியிடம் எந்தவித அசைவும் இல்லாததால் கார்த்திக் அதிர்ச்சியுற்று மீண்டும் செவிலியரை வலியுறுத்தியுள்ளார். Spo2 அவு 12 லிருந்து இரண்டாக குறைந்து விட்டதை கண்டு வலியுறுத்தி கூறினார்.
அதன் பேரில் மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு அந்த வார்டில் இருந்த மற்ற நோயாளிகளின் சென்ட்ரலைஸ் மூலம் வருகின்ற ஆக்சிஜனை சோதனை செய்து பார்த்தனர். இதில் கசிவு ஏற்பட்டு நான்கு படுக்கைகளிலும் SOP2 இரண்டு அளவு தான் வருகின்றது என கண்டறிந்தனர்.
பின்னர் மீண்டும் கலாநிதி இடம் வந்து சோதனை செய்து பார்த்ததில் சுவாச அளவு மிகவும் குறைந்து விட்டது காணப்பட்டது. மருத்துவர்கள் அதிகப்படுத்த முயற்சி செய்தனர். ஆனால், அதற்குள் சிகிச்சை பலனின்றி கலாநிதி இறந்து விட்டார்.
கார்த்திக் கலாநிதியின் மகன்களை வர வைத்து அங்கு நடந்த சம்பவத்தை விளக்கினார். அதனால் மகன்கள் மருத்துவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். என்னுடைய அம்மாவுக்கு தேவையான ஆக்சிஜனை அளிக்காமல் அலட்சிய போக்கில் செயல்பட்டதால் என்னுடைய அம்மாவை கொன்று விட்டீர்கள் என கதறி அழுதனர்.
சீஃப் டாக்டர் அவர்களை சமாதானம் செய்து குழாய் மூலம் spo2 முழுமையாக செல்லாவிடில் பல நோயாளிகளுக்கு பிரச்சனை ஏற்பட்டிருக்குமே, அப்படி இருக்கும் பொழுது இந்த நான்கு படுக்கையில் உள்ள நோயாளிகளுக்கு மட்டும் தான் எப்படி அளவு குறைவாக காணப்பட்டது என எதிர் கேள்வி எழுப்பினர்.
மேலும், நீங்கள் இதுகுறித்து பிரச்சினை எழுப்பினால், உங்களுடைய அம்மாவின் சடலத்தை பிரேத பரிசோதனை செய்து தான் அனுப்ப முடியும் என தெரிவித்ததால், கலாநிதியின் மகன்கள் தனது தாயாரின் சடலத்தை பிரேத பரிசோதனை செய்யாமல் எடுத்து செல்வதாக கூறினார்.
அதேபோல், கலாநிதி இறப்பதற்கு முன்னதாக மற்றொரு பூச்சிவாக்கத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்ற நோயாளி (70) அவரும் இறந்துவிட்டார்.
நேற்று மதியம் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் ஒரு மணி நேர இடைவெளியில் இரண்டு பேர் சரியான ஆக்சிஜன் அளவு கிடைக்காமல் உயிர் இழந்தது மருத்துவமனையில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.
இது குறித்து அவருடைய இரண்டாவது மகன் சீனிவாசன் நம்மிடம் கூறும் பொழுது :- என்னுடைய அம்மாவிற்கு Spott அளவு 12 வைத்து கண்காணித்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், நன்றாக பேசினார். மதியம் உணவு வாங்கி வர கூறினார். இதனால் நாங்கள் மகிழ்ச்சி அடைந்தோம் . மதியம் வரை நன்றாக பேசிக் கொண்டிருந்தவர், உணவு வாங்கி விட்டு வந்து பார்க்கும் போது ஆக்சிஜன் செறிவு (SpO2) 2 நிலையிலும், இதயத் துடிப்பு நிலை 87 நிலையிலும் காணப்பட்டது.
பொதுவாகவே காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையின் நிர்வாக கோளாறு காரணமாக ஆண் செவிலியர்கள், மருத்துவர்கள், தங்கள் டூட்டியில் கவனம் செலுத்தாமல் உள்ளனர். இதனால் அதிகமான நோயாளிகள் பாதிக்கப்படுகிறார்கள். என்னுடைய தாய்க்கு ஏற்பட்ட நிலை, இதை யாருக்கும் ஏற்படக்கூடாது, என வேண்டினர்.