இபிஎஸ் கைதை கண்டித்து பல இடங்களில் அதிமுகவினர் சாலை மறியல் ; திமுகவுக்கு எதிராக முழக்கம்… ஆங்காங்கே குவிந்த போலீசார்..!!

Author: Babu Lakshmanan
19 October 2022, 1:08 pm

திருச்சி : அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கைது செய்யப்பட்டதை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அதிமுகவின் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தமிழக அரசை கண்டித்தும், சட்டசபை மரபுகளை மீறிய சபாநாயகர் செயல்படுவதாகக் கூறியும், இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தடையை மீறி போராட்டம் நடத்துவதாகக் கூறி இபிஎஸ் உள்பட அதிமுக எம்எல்ஏக்களை போலீசார் கைது செய்தனர்.

இந்த கைது நடவடிக்கையை கண்டித்து சேலம், திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அதிமுகவினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

admk protest - updatenews360

இதன் ஒரு பகுதியாக திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள பெரியார் சிலை முன்பு திருச்சி மாநகர மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் ரத்தினவேலு தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை விடுதலை செய்ய வலியுறுத்தி கோஷமிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட அதிமுகவினரை காவல்துறையினர் கைது செய்தனர்.

admk protest - updatenews360

இதேபோல, திருவள்ளூரில் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து பொன்னேரியில் அதிமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

admk protest - updatenews360

போராட்டத்தின் போது ஆம்புலன்ஸ் அவ்வழியாக வந்ததால் மறியலை கைவிட்டு போலீசாரின் சமரசத்தை ஏற்று கலைந்து சென்றனர். ஆம்புலன்ஸ் செல்வதற்காக மறியலை அதிமுகவினர் கைவிட்ட நிகழ்வு பொதுமக்களின் பாராட்டுக்களை பெற்றது.

  • Viveks Twin Daughterநடிகர் விவேக்கிற்கு பிறந்த இரட்டை குழந்தைகள்.. வெகு நாள் கழித்து வெளியான உண்மை!
  • Views: - 500

    0

    0