பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி… 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் பிறந்த குழந்தை : துரிதமாக செயல்பட்ட மருத்துவ உதவியாளர்கள்.. குவியும் பாராட்டு!!

Author: Udayachandran RadhaKrishnan
19 October 2022, 2:24 pm

கோவை வீரபாண்டி பகுதியைச் சேர்ந்தவர் மணிமேகலை (வயது 26). இவரது கணவர் சிலம்பரசன். இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியான மணிமேகலைக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.

இதையடுத்து அவரது கணவர் காரமடை பகுதியில் உள்ள 108 ஆம்புலன்ஸ் அழைப்பு விடுத்துள்ளார். உடனடியாக அங்கு வந்த ஆம்புலன்ஸ் மணிமேகலையை ஏற்றி பெரியநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல புறப்பட்டனர்.

அப்போது வீரபாண்டி பகுதியில் போகும்போது பனிக்குடம் உடைந்து ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. அவசர மருத்துவ உதவியாளர் பாலமுருகன் மற்றும் பைலட் சங்கர் கணேசன் ஆகியோர் மணிமேகலைக்கு முதல் உதவி செய்தனர்.

தற்போது தாய் மற்றும் சேய் வீரபாண்டி புதூர் பகுதியில் உள்ள தாய் சேய் நல மருத்துவமனையில் நலமாக உள்ளனர். பிரசவ வலிக்கு போராடிய பெண்ணுக்கு ஆம்புலன்ஸில் பெண் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் மருத்துவ உதவியாளருக்கு பாராட்டுகளை குவித்து வருகிறது.

  • Annamalai vs Cool Suresh Whip Trendஅண்ணாமலையை தொடர்ந்து கூல் சுரேஷ் சாட்டையடி… வைரலாகும் வீடியோ..!
  • Views: - 478

    0

    0