தேங்காய் நார் ஏற்றி வந்த லாரியில் திடீர் தீவிபத்து… பெட்ரோல் பங்க் அருகே ஏற்பட்ட தீவிபத்தால் அலறிய பொதுமக்கள்..!!
Author: Babu Lakshmanan19 October 2022, 6:00 pm
வேலூர் அருகே பெட்ரோல் பங்க் அருகே நிறுத்தப்பட்டிருந்த தேங்காய் நார் ஏற்றி வந்த லாரியில் திடீர் தீவிபத்து ஏற்பட்டதால், பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கார்த்திகேயபுரம் பகுதியில் பிரதீப் என்பவர் தேங்காய் நார் கம்பெனி நடத்தி வருகிறார். இன்று மாலை சித்தூர் பகுதியில் இருந்து பயாஸ் என்பவர் லாரியில் தேங்காய் நார் ஏற்றுக் கொண்டு வந்த போது, எதிர்பாராத விதமாக மின்சார கம்பி உரசியதில் திடீரென லாரியில் இருந்த தேங்காய் நார் தீப்பிடித்து மளமளவென எரிய தொடங்கியுள்ளது.
உடனடியாக ஓட்டுநர் லாரியை விட்டு கீழே இறங்கிய நிலையில், இது குறித்து குடியாத்தம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். விரைந்து வந்த குடியாத்தம் தீயணைப்புத் துறையினர் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர்.
தீ பிடித்து எரிந்த நார் கம்பெனிக்கு அருகிலேயே பெட்ரோல் பங்க் இருந்ததால் சற்று பதற்றம் நீடித்தது.