கொலை வழக்கில் போலீசுக்கு தண்ணி காட்டிய குற்றவாளி : கஞ்சா வழக்கில் கையும் களவுமாக கைது!!

Author: Udayachandran RadhaKrishnan
19 October 2022, 9:38 pm

பழனி அடிவாரம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கொலை குற்றவாளி உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் பகுதியில் கஞ்சா விற்பனை அதிகரித்து உள்ளதாக திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரனுக்கு தொடர்பு புகார்கள் சென்றது.

இதையடுத்து காவ்லதுறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் பழனியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அடிவாரம் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த மூவரை பிடித்து விசாரணை செய்தனர்.

அப்போது அவர்களிடம் 127பொட்டலங்கள் கொண்ட 750 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது பழனி பகுதியை சேர்ந்த மெர்சல் (வயது 22) என்ற சந்துரு, பரதன்(வயது 22) மற்றும் பாலமுருகன் என்பதும், இவர்கள் மூவரும் கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது‌.

மேலும் கைதான மூவரில் மெர்சல் என்பவர் மீது இரண்டு கொலை வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. தொடர்ந்து மூவரையும் அடிவாரம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 582

    0

    0