பாம்பன் பாலத்தில் செல்ல நடுங்கும் வாகன ஓட்டிகள்… தொடரும் விபத்தால் அச்சம்.. அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி 15 பேர் படுகாயம்..!!

Author: Udayachandran RadhaKrishnan
20 October 2022, 10:39 am

ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில், இன்று அதிகாலை ராமேஸ்வரத்திலிருந்து ராமநாதபுரம் நோக்கி சென்ற அரசுப்பேருந்தும், திருச்சியிலிருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்ற அரசுப்பேருந்தும் ஓட்டுநர்களின் கட்டுப்பாட்டை இழந்து மோதி விபத்துக்குள்ளானது.

அதில், 2 பேருந்துகளிலும் பயணித்த ஓட்டுநர்கள் உட்பட 15க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கும், உச்சிப்புளி ஆரம்ப சுகாதார நிலையத்திலும் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ராமேஸ்வரம் பகுதியில் இன்று அதிகாலை மழை பெய்து பாம்பன் பாலத்தில் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்ததன் காரணமாக, பேருந்துகள் கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.

  • china decided to ban american movies shocking marvel fans சூப்பர் ஹீரோ திரைப்பட நிறுவனங்களுக்கு ஆப்பு வைக்கப்போகும் சீனா?