மூன்று நாள் 5 நிமிட இடைவெளியில் மெட்ரோல் ரயில்.. இரவு வரை நீட்டிப்பு : தீபாவளியை முன்னிட்டு மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
20 October 2022, 4:36 pm

சென்னையில் இன்று முதல் 22 வரை மூன்று நாள்களுக்கு கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று(அக். 20) முதல் 22 வரை மூன்று நாள்களுக்கு கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தீபாவளியை முன்னிட்டு நெரிசல்மிகு நேரங்களில் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 5 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவைகள் இன்று முதல் 22 வரை மூன்று நாள்களுக்கு இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் நெரிசல்மிகு நேரங்களில் கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 5 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவைகள் மேற்குறிப்பிட்ட மூன்று நாள்கள் மட்டும் 5 நிமிடத்திற்கும் குறைவான இடைவெளியில் இயக்கப்படும்.

எனவே, மேற்குறிப்பிட்ட 3 நாள்களில் பயணிகள் மாலை 5 மணி முதல் 8 மணி வரையிலான நெரிசல்மிகு நேரங்களில் தங்கள் பயணத்தைத் திட்டமிட்டுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கூடுதல் மெட்ரோ ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில் நீட்டிப்பு இன்று முதல் 22 வரை மட்டுமே என கூறப்பட்டுள்ளது,

  • good bad ugly movie special screening for ladies பெண்களுக்கு மட்டுமே திரையிடப்படும் குட் பேட் அக்லி திரைப்படம்! அதிரடி காட்டிய பிரபல திரையரங்கம்…