இன்னும் ஆரம்பிக்கவே இல்ல அதுக்குள்ளயா? ட்விட்டர் ஊழியர்களை கதிகலங்க வைத்த எலான் மஸ்க்…!!
Author: Udayachandran RadhaKrishnan21 October 2022, 5:04 pm
உலக முன்னணி தொழிலதிபராக வலம் வரும் எலான் மஸ்க் கடந்த ஏப்ரல் மாதம் சமூக வலைதளமான ட்விட்டரை வாங்குவதாக அறிவித்தார். மேலும் அந்நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் 44 பில்லியன் அமெரிக்க டாலர்களை வாங்குவதாக அறிவித்திருந்தார்.
ஆனால் ஒப்பந்தம் போட்ட சில வாரங்களில் அதில் இருந்து வெளியேறுவதாக அறிவித்த எலான் மஸ்க், தற்போது மீண்டும் ட்விட்டரை வாங்குவதில் மும்முரம் காட்டி வருதுகிறார்.
இந்த நிலையில் ட்விட்டரை வாங்குவதற்கு முன்னரே ஊழியர்களுக்கு அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டுள்ளார். அதாவது ட்விட்டரில் இருந்து 75% ஊழியர்களை பணி நீக்கம் செய்ய அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஊழியர்களின் சம்பள செலவை குறைத்து வருவாயை பெருக்க எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளதாகவும், ட்விட்டர் நிறுவனத்தில் உள்ள ஊழியர்களின் எண்ணிக்கையை 2 ஆயிரமாக குறைக்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சில மாதங்களாகவே முன்னணி கார்ப்ரேட் நிறுவனங்கள் பணிக்கு ஆட்கள் எடுப்பதை குறைத்துக்கொண்டு வரும் நிலையில் எலான் மஸ்க் திட்டத்தால் ட்விட்டர் ஊழியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
ஏற்கனவே முகநூலின் தாய் நிறுவனம் என கருதப்படும் மெட்டா நிறுவனம் தனது 12 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.