ஹாரன் அடித்ததால் ஆத்திரம்… தண்டவாளத்தில் இருந்து விலக மறுத்த போதை ஆசாமி… ரயில் மீது கற்களை வீசி தாக்குதல்!!

Author: Babu Lakshmanan
22 October 2022, 6:59 pm

சென்னை : சென்னையில் மதுபோதையில் இருந்த இளைஞர்கள் ரயில் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று மாலை சென்னை கொருக்குப் பேட்டையில் இருந்து வியாசர்பாடி வழியாக சரக்கு பெட்டக ரயிலின் என்ஜின் சென்றுள்ளது. அப்போது, தண்டவாளத்தின் மீது இளைஞர்கள் 3 பேர் நின்று கொண்டிருந்தனர். இதனைக் கண்ட ஓட்டுநர், அவர்களை விலகச் செய்வதற்காக, ஒலிபெருக்கியை ஒலிக்க செய்துள்ளார்.

train attack - updatenews360

அதில், மது போதையில் இருந்த ஒரு இளைஞர், தண்டவாளத்தில் இருந்த கற்களை எடுத்து ரயில் மீது வீசி ஓட்டுநரை தாக்கியுள்ளார்.

train attack - updatenews360

அந்த இளைஞரின் நண்பர்கள் தடுத்தும் கூட, நிற்க முடியாத அளவுக்கு போதையில் இருந்த அந்த நபர், கற்களை வீசி தாக்கியுள்ளார். இதில், ரயிலின் முன்பக்க கண்ணாடி உடைந்து ஓட்டுநரின் கையில் வீக்கம் ஏற்படும் அளவிற்கு காயம் ஏற்பட்டுள்ளது.

போதை ஆசாமியின் இந்த அராஜகத்தை ஓட்டுநர் தனது செல்போனில் வீடியோ எடுத்து உள்ளார். இந்த வீடியோ காட்சியின் அடிப்படையில், கொருக்குப்பேட்டை மத்திய இரயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

  • Sikandar movie teaser release ஏ.ஆர்.முருகதாஸின் தரமான சம்பவம் LOADING…மிரட்டலாக வெளிவந்த சல்மான் கானின்”சிக்கந்தர்”பட டீஸர்..!
  • Views: - 427

    0

    0