தனியார் கல்லூரி விடுதியில் மாணவன் எடுத்த விபரீத முடிவு : ஆன்லைனில் விஷம் வாங்கியது அம்பலம்!!

Author: Udayachandran RadhaKrishnan
23 October 2022, 12:20 pm

ஆன்லைனில் விஷம் வாங்கி குடித்து தனியார் கல்லூரி மாணவன் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் தனியார் கல்லூரி ஒன்று உள்ளது. இந்த கல்லூரியில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த நிகில்(வயது21) என்ற மாணவன் படித்து விடுதியில் தங்கி இருந்தார்.

இந்த நிலையில் மாணவன் நிகில் கல்லூரி விடுதியில் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தர்.

மேலும், மாணவன் தற்கொலை செய்து சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதில், தற்கொலை செய்வதற்காக மாணவன் நிகில் ஆன்லைனில் விஷம் வாங்கியது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

  • Good Bad Ugly Hit of Flop குட் பேட் அக்லி படம் ஹிட்டா? இல்லையா? இன்னும் எவ்வளவு கோடி வசூல் செய்யணும்?