தொடர் விடுமுறையால் கொடைக்கானலில் நிரம்பி வழியும் சுற்றுலா பயணிகள்: போக்குவரத்து நெரிசலால் அணிவகுத்த வாகனங்கள்..!
Author: Vignesh24 October 2022, 10:57 am
கொடைக்கானல் : ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளி மாநில சுற்றுலா பயணியர் பலர், நேற்று கொடைக்கானலில் குவிந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில், பள்ளி காலாண்டு விடுமுறை, சில வாரங்களுக்கு முன் ஆயுத பூஜையை முன்னிட்டு, சுற்றுலா பயணியர் குவிந்தனர். தற்போது தொடர் மழை, தீபாவளியால் தமிழக பயணியர் வருகை முற்றிலும் இல்லாத சூழல் இருந்தது.
இதனிடையே, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளிமாநில சுற்றுலா பயணியர் பலர் கொடைக்கானலில் முகாமிட்டனர். இங்குள்ள செட்டியார் பூங்கா, பிரையன்ட் பூங்கா, கோக்கர்ஸ் வாக், ரோஜா பூங்கா, வெள்ளி நீர்வீழ்ச்சி, வனச் சுற்றுலா தலங்களை பார்த்து ரசித்தனர்.
ஏரி சாலையில் குதிரை, சைக்கிள் சவாரி செய்தும் மகிழ்ந்தனர். சுட்டெரித்த வெயிலுடன் இதமான சூழல் நீடித்த நிலையில் பயணியர் படகு சவாரி செய்தனர்.
தொடர்ந்து கூட்டம் அதிகரிப்பதால் முக்கிய சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல கூடிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.