சூரிய முத்திரை செய்வதால் கிடைக்கும் அபார நன்மைகள்!!!
Author: Hemalatha Ramkumar24 October 2022, 2:43 pm
சூரிய முத்திரை என்பது ஒரு வித விரல் அமைப்பு ஆகும். நமது உடலில் உள்ள ஆற்றல் சூரிய ஒளியில் இருந்து பெறப்படுகிறது என்று நம்பப்படுகிறது. சூரிய முத்திரை ‘குணப்படுத்தும் முத்திரையாக கருதப்படுகிறது. உடலில் இருக்கக்கூடிய எந்தவொரு வெளிப் பொருளையும் அகற்ற இந்த முத்திரையைப் பயிற்சி செய்யலாம்.
சூரிய முத்திரையின் பலன்கள்:
●நீரிழிவு நோய்:
சூரிய முத்திரையை தொடர்ந்து செய்வது வளர்சிதை மாற்ற விகிதங்களை அதிகரித்து எடை மேலாண்மைக்கு உதவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவும். இது வகை -2 நீரிழிவு நோயைக் குறைக்கும்.
●தைராய்டு:
சூரிய முத்திரை உடலில் உள்ள தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை மேம்படுத்தும். எனவே, இது ஹைப்போ தைராய்டிசத்தால் ஏற்படும் உடல் பருமன் போன்ற பிரச்சனைகளைக் குறைக்க உதவுகிறது.
●உடல் வெப்பநிலை:
நாம் சூரிய நமஸ்காரத்துடன் சூரிய முத்திரையை பயிற்சி செய்யும் போது, அது உடல் வெப்பநிலையை சீராக்கும். சூரிய முத்திரை நடுக்கத்தைத் தவிர்க்கிறது.