எலும்பு முறிவை குணமாக்க வீட்டில் இருந்தபடியே நீங்கள் செய்யக்கூடிய விஷயங்கள்!!!
Author: Hemalatha Ramkumar24 October 2022, 6:09 pm
எலும்பு முறிவு ஏற்படுவது மிகவும் பொதுவானது. எலும்பு முறிவு என்பது உடைந்த எலும்பினைக் குறிக்கும் மருத்துவ விளக்கமாகும். ஒரு சில நேரங்களில் எலும்பு முறிவு சரிசெய்ய அறுவை சிகிச்சை தேவைப்படலாம். எலும்பு முறிவு உங்கள் எலும்புகளை பலவீனப்படுத்துகிறது. உங்கள் எலும்புகளை வலுப்படுத்த சில குறிப்புகளைப் பார்க்கலாம்.
உடற்பயிற்சி: உங்கள் எலும்புகளை குணப்படுத்த பரிந்துரைக்கப்படும் சில உடற்பயிற்சிகள் உள்ளன. இந்த பயிற்சிகளை தவிர்க்க வேண்டாம். உங்கள் எலும்புகளை வலுப்படுத்த நல்ல ஓட்டம் மற்றும் ஊட்டச்சத்துக்களின் சுழற்சி அவசியம். தேவையான பயிற்சிகளை கவனமாகச் செய்தால் எலும்பு குணமாகும் செயல்முறையை மேம்படுத்தலாம். உடற்பயிற்சி அந்த பகுதிக்கு இரத்த ஓட்டம் மேம்படும்.
எண்ணெய் மசாஜ்: குணமடைந்த பிறகும் காயத்திற்கு எண்ணெய் தடவவும். எலும்புகளை குணப்படுத்த சில இயற்கை எண்ணெய்களை முயற்சிக்கவும். எலும்புகளை குணப்படுத்துவதில் செயல்படும் சில எண்ணெய்கள் சைப்ரஸ் எண்ணெய், ஹெலிகிரிசம் எண்ணெய் மற்றும் ஃபிர்-ஊசி எண்ணெய் ஆகியவை சேதமடைந்த நரம்புகள் மற்றும் திசுக்களின் பழுது மற்றும் குணப்படுத்துதலை துரிதப்படுத்துகின்றன. இது உங்கள் எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது மற்றும் குணப்படுத்தும் செயல்முறையை மேம்படுத்துகிறது.
மது மற்றும் புகைப்பிடித்தலைத் தவிர்க்கவும்: புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல், உங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் உங்கள் எலும்பை விரைவாக குணப்படுத்துவதை தடுத்து விடும். இது உங்கள் எலும்புகளை குணப்படுத்தும் செயல்முறையை தாமதப்படுத்துகிறது. இத்தகைய நச்சுப் பொருட்கள் உங்கள் எலும்பில் உள்ள இரத்த ஓட்டத்தை மாற்றி, அதன் மூலம், உங்கள் எலும்புகள் குணப்படுத்துவதற்கு தேவையான ஊட்டச்சத்துக்களைப் பெறுவதைத் தடுக்கிறது.
சோடியம் மற்றும் உப்பை தவிர்க்கவும்: அதிக அளவு உப்பு மற்றும் சர்க்கரையை உட்கொள்ள வேண்டாம். சோடியம், இனிப்பு பானங்கள் மற்றும் கோலா போன்றவை எலும்புகளில் இருந்து கால்சியத்தை அகற்றி விடும். இது உங்கள் எலும்பு குணப்படுத்துவதைக் தாமதமாக்கலாம். காஃபினில் உள்ள சில கலவைகள் கால்சியத்துடன் கலக்கின்றன. இதனால், குணப்படுத்தும் செயல்முறையை மெதுவாக்குகிறது.
சமச்சீர் உணவை உட்கொள்ளவும்: உங்கள் உணவு உங்கள் ஆரோக்கியத்தையும் உடலையும் நேரடியாகப் பாதிக்கிறது. ஆரோக்கியமான உணவு என்பது காய்கறிகள், பழங்கள், மெலிந்த புரதம் மற்றும் நீர் நிறைந்த உணவு. எலும்புகளை குணப்படுத்தும் செயல்பாட்டின் போது கால்சியம் வைட்டமின் டி மற்றும் புரதம் முக்கியமானதாக அமைகிறது. எனவே கீரைகள், ப்ரோக்கோலி, மீன், இறைச்சி, தயிர், கொட்டைகள் மற்றும் விதைகள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளவும்.