இரட்டை குழந்தை விவகாரம்… சிக்கலில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதி..? விதிகளை மீறியது அம்பலம்!!

Author: Babu Lakshmanan
25 October 2022, 10:50 am

நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியினரின் இரட்டை குழந்தை விவகாரத்தில் மருத்துவமனை நிர்வாகம் விதிகளை மீறியிருப்பது அம்பலமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் ஜூன் 9ம் தேதி திருமணம் நடந்தது. இந்நிலையில் தாங்கள் பெற்றோர் ஆகிவிட்டதாக அக்டோபர் 9ம் தேதி அறிவித்தார் விக்னேஷ் சிவன். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வாடகைத் தாய் மூலம் பெற்றோர் ஆன விவகாரம் குறித்து விசாரணை நடத்த தனிக் குழுவை அமைத்தது தமிழக அரசு.

vignesh shivan - nayanthara - updatenews360

அதேவேளையில், வாடகைத் தாய் விவகாரம் சர்ச்சை எழுந்த நிலையில், நயன்தாரா – விக்னேஷ் சிவன் விளக்கம் கொடுத்தனர். அதாவது, வாடகைத் தாய் மூலம் பிள்ளைகள் பெற்றதால் எந்த சட்டத்தையும் மீறவில்லை என்றும், ஆறு ஆண்டுகளுக்கு முன்பே பதிவுத் திருமணம் செய்து கொண்டதாகவும், துபாயில் இருக்கும் உறவினர் தான் வாடகைத் தாயாக இருந்தார் என்று தெரிவித்துள்ளனர்.

vignesh shivan - nayanthara - updatenews360

இந்த நிலையில், வாடகை தாய் விவகாரம் தொடர்பாக மருத்துவ நிர்வாகத்திடம் இன்று மருத்துவத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மருத்துவமனை நிர்வாகம் விதிகளை மீறி இருப்பது அம்பலமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்று மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் விளக்கம் பெற்றவுடன் அறிக்கை வெளியிடப்படும் என்றும், விதிகளை மீறி இருப்பது உறுதி செய்யப்படும் பட்சத்தில் மருத்துவமனை மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், மருத்துவமனையின் விளக்கத்தை பொருத்து நயன்தாரா – விக்னேஷ் சிவனிடம் விளக்கம் பெறப்பட்டு அறிக்கை வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 561

    0

    0