மதுபோதையில் 15 வயது காதலியை கழுத்தை நெரித்துக் கொன்று ஏரியில் வீசிய சம்பவம் ; காதலன் உள்பட 2 பேர் கைது..!!
Author: Babu Lakshmanan25 October 2022, 11:08 am
திருவள்ளூர் ; திருவள்ளூர் அருகே சிறுமியை காதலித்து ஏமாற்றி அழைத்துச் சென்று மது போதையில் கழுத்தை நெரித்து கொலை செய்து ஏரியில் வீசிய சம்பவத்தில் காதலன் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் பூவலம்பேடு அருகே கொல்லானூர் ஏரியில் நேற்று முன்தினம் சடலமாக சிறுமி ஒருவரது உடல் இருப்பதாக பாதிரிவேடு காவல்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனர். அதன்பேரில், 15 வயது மதிக்கத்தக்க சிறுமியின் உடலை மீட்டு சந்தேகத்தின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில், உயிரிழந்த சிறுமி நெல்வாய் கிராமத்தைச் சேர்ந்த திலகா என்பவரது 15 வயது மகள் என அவரது உடல் அடையாளம் தெரிந்தது. கடந்த 18ம் தேதி உஷா வீட்டில் இருந்து மாயமாகிய நிலையில், இது குறித்து பெற்றோர் புகார் அளித்திருந்த நிலையில், ஏரியில் சடலமாக கிடந்தார்.
சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில், சிறுமியை அவரது காதலன் முக்கரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த
பிரவீன் மற்றும் ரஞ்சித் இருவரும் அழைத்துச் சென்று மதுபோதையில் சிறுமியின் கழுத்தை நெரித்து கொலை செய்து ஏரியில் வீசியது தெரிய வந்தது. இருவரையும் கைது செய்து பாதிரிவேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சிறுமியை காதலித்து ஏமாற்றி அழைத்து வந்து மது போதையில் கழுத்தை நெரித்து கொலை செய்து ஏரியில் வீசி விட்டு சிறுமி ஏரியில் மூழ்கி உயிரிழந்ததைப் போன்று தற்கொலையாக மாற்றி கொலையை மறைக்க முயன்ற பிரவீன் மற்றும் ஜெகன் இருவரும் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.