திருப்பதி கோவில் நடை திறக்கப்படும் நேரம் எப்போது? கிரகணத்தை முன்னிட்டு தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan25 October 2022, 3:02 pm
திருப்பதி: சூரிய கிரகணத்தை முன்னிட்டு ஏழுமலையான் கோயில் நடை அடைக்கப்பட்டது.
இதனை முன்னிட்டு வழக்கத்தில் உள்ள நடைமுறையின்படி எட்டு மணி நேரம் முன்னதாக அதாவது இன்று காலை மணி 8: 11 க்கு திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை அடைக்கப்பட்டது.
கிரகணம் முடிந்த பின் கோவில் முழுவதும் சம்பிரதாய முறையில் சுத்தம் செய்யப்படும். அதன்பின்னர் இரவு 7:30 மணிக்கு கோவில் நடை மீண்டும் திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி கும்பிட அனுமதி அளிக்கப்படும்.
கிரகணத்தை முன்னிட்டு திருமலையில் உள்ள அன்னதான கூடம், ஹோட்டல்கள், கடைகள் ஆகிய அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
ஒரே வரியில் சொல்வதென்றால் திருப்பதி மலை முழுவதும் மூடப்பட்டுள்ளது. மேலும் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்தின் கீழ் இருக்கும் பத்மாவதி தாயார் கோவில், திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சாமி கோவில் ஆகிரி உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் காலை மணி 8: 11க்கு நடை அடைக்கப்பட்டது.