‘வீடியோ எடுத்து என்ன பண்ணுவ’… பாஜக கொடிக்கம்பத்தை அகற்றிய திமுகவினர்… பெண் நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக புகார்!!
Author: Babu Lakshmanan25 October 2022, 4:59 pm
வேலூர் : பா.ஜ.க கொடியை அகற்றியதாகவும், பா.ஜ.க பெண் பிரமுகரை அவதூறாக பேசியதாகவும் திமுகவினர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாநகரட்சி ஒன்றாவது மண்டலத்துக்குட்பட்ட 2வது வார்டில் சாலையோரம் நடப்பட்டிருந்த பா.ஜ.க கோடி கம்பத்தை அப்பகுதியை சேர்ந்த திமுகவினர் சிலர் அகற்றியுள்ளர்.
இதை கேட்கச் சென்ற வேலூர் மாவட்ட பா.ஜ.கவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் தலைவரான சூர்யா என்ற பெண்ணை திமுக பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசன் மற்றும் கட்சியினர் அவதூறாக பேசியதாகவும், தன்னை பெண் என்றும் பாராமல் கையை பிடித்து இழுத்து தள்ளியதாகவும், பா.ஜ.க. குறித்து அவதுராக பேசியதாகவும் பாதிக்கப்பட்ட பெண் பிரமுகர் மற்றும் கட்சியினர் காட்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
மேலும், தங்கள் கட்சி கொடியை கடந்த 6 மாதங்களாக அங்கு நட்டு பராமரித்து வருவதாகவும், திமுகவினர் திடீரென தற்போது வந்து கட்சி கொடிக்கம்பத்தை அகற்றியதாகவும் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தப் புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.