வாடகைத் தாய் விவகாரம்… நயன் – விக்கி விதிகளை மீறினார்களா..? நாளை வெளியாகும் முக்கிய அறிவிப்பு!!

Author: Babu Lakshmanan
25 October 2022, 6:11 pm

சென்னை : நயன்தாரா – விக்னேஷ் சிவன் இரட்டை குழந்தை விவகாரம் தொடர்பாக நாளை மாலை அறிக்கை வெளியிடப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்

தீபாவளி பண்டிகை முடிந்துள்ள நிலையில் பட்டாசு வெடித்து தீக்காயம் ஏற்பட்டு சென்னையில் உள்ள 3 அரசு மருத்துவமனை மற்றும் எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் உள்ள தீக்காயப்பிரிவில் சிகிச்சை பெற்று வருபவர்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அதன் பிறகு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது :- தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிக்கும் போது பாதுகாப்பான முறையில் வெடிக்க வேண்டும் என்று காவல்துறை தீயணைப்பு துறை மற்றும் சுகாதாரத்துறை இணைந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பட்டாசு வெடிக்கும் போது தீ காயம் ஏற்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து மாவட்ட மருத்துவமனையிலும் தீ காயத்திற்கு சிறப்பு வார்ட் அமைக்கப்பட்டது.

பொது மக்களுக்கு தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் தமிழகத்தில் பட்டாசு வெடித்து தீக்காயம் ஏற்பட்டு 180 பேர் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருவதாகவும், விபத்துகள் குறைவான அளவில் இருந்தாலும் கூட விபத்துகளே இருக்க கூடாது என்று அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறுய அவர், தற்பொழுது தீக்காயத்தால் சிகிச்சை பெற்று வருபவர்கள் அனைவரும் 17% அளவில் மட்டுமே தான் தீக்காயம் எற்பட்டுள்ளதாகவும், உயிர் சேதம் எதுவும் இல்லை என்றார். ஆனாலும் கூட இந்த ஆண்டு நிறைய சிறுவர்கள் பாதிக்கப்பட்டு இருப்பது வருத்தம் அளிக்கிறது என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 4 சிறுவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள் அனைவரின் 17 வயதிற்கு குறைவானவர்கள் எனவும், அதில் ஒருவர் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர், மற்றவர்கள் சென்னையில் உள்ளவர்கள் என்றார். அதேபோல, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 11 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள், அவர்கள் அனைவரும் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்றார்.

குழந்தைகள் நல மருத்துவமனையில் 2 குழந்தைகள் தீ காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள், அதில் ஒருவர் தெலுங்கானாவை சேர்ந்தவர், அதேபோல், கே.ம்.சி மருத்துவமனையில் 7 பேர் உள் நோயாளிகள் எனவும், 8 பேர் வெளி நோயாளி பிரிவில் சிகிச்சை பெற்று சென்று இருக்கிறார்கள் என்ற அவர், அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களில் ஒருவருக்கு கண் பாதிப்பு ஏற்பட்டுள்ளது, அவருக்கு கண் பார்வை இலக்கும் அளவில் உள்ளது, என்றார்.

பட்டாசு வெடித்து தீக்காயத்தில் அதிகமான பாதிக்கப்பட்டவர்கள் குழந்தைகள், அதனால் குழந்தைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது பெற்றோர்களின் கடமை என்வும், பொதுமக்கள் கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என கூறினார்.

நயன்தாரா விக்னேஷ் சிவன் இரட்டை குழந்தை விவகாரம் தொடர்பாக நாளை மாலை அறிக்கை வெளியிடப்படும் எனவும், அதேபோல, தனியார் தொலைக்காட்சியில் வாடகை தாய் விவகாரம் தொடர்பாக வெளியிட்ட செய்தி குறித்தும் அறிக்கை நாளை மாலை வெளியிடப்படும் என தெரிவித்தார்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 448

    0

    0