முதல்ல ரூ.1,334 கோடி… இப்ப ரூ.936 கோடி அபராதம் : ஒரே மாதத்தில் கூகுள் நிறுவனத்துக்கு பல கோடி ஃபைன் : காரணம் தெரியுமா?

Author: Udayachandran RadhaKrishnan
25 October 2022, 9:37 pm

கூகுளின் ஆண்ட்ராய்டு இந்தியாவிலும் உலக அளவிலும் ஸ்மார்ட்போன்களை ஆளும் ஒரே ஆப்பரேட்டிங் சிஸ்டமாக உள்ளது. இதனை இயங்குதளம் அல்லது ஒஎஸ் என்பர். இதற்கு ஒரே போட்டி ஆப்பிளின் ஐஒஎஸ் மட்டுமே.

இந்த ஆதிக்கத்தை கூகுள் தவறாக பயன்படுத்துவதாக கூறப்பட்ட குற்றச்சாட்டுக்களை விசாரித்த இந்திய போட்டி ஆணையம் கூகுள் நிறுவனத்திற்கு கடந்த அக்., 20ம் தேதி ரூ.1,337.76 கோடி அபராதம் விதித்தது.

இது போன்ற தொழில் நடைமுறைக்கு எதிராக தடை உத்தரவு பிறப்பித்துள்ளதுடன், நியாயமற்ற வணிக நடைமுறைகளைத் தவிர்க்குமாறு கூறியுள்ளது.

இந்நிலையில் அபராதத்திற்கு தேவையான நிதி விவரங்கள் மற்றும் ஆதார ஆவணங்களை வழங்க கூகுளுக்கு ஏற்கனவே கால அவகாசம் அளித்திருந்த நிலையில் இன்று மேலும் ரூ. 936.44 கோடி அபராதம் விதித்துள்ளது.

  • china decided to ban american movies shocking marvel fans சூப்பர் ஹீரோ திரைப்பட நிறுவனங்களுக்கு ஆப்பு வைக்கப்போகும் சீனா?