வெடிபொருட்கள் பறிமுதல் செய்தது தெரியுமா..? தெரியாதா..? பிறகு எதற்காக மவுனம்… முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வானதி சீனிவாசன் கேள்வி..

Author: Babu Lakshmanan
26 October 2022, 1:15 pm

கோவை : கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணையை என்ஐஏ அதிகாரிகளிடம் தமிழக அரசு ஒப்படைக்க வேண்டும் என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

கோவை ஈஸ்வரன் கோயில் வீதியில் வெடிபொருட்களுடன் சென்ற கார் வெடித்து ஜமேஷா முபீன் என்ற நபர் பலியானார். மேலும், நாட்டு வெடிகுண்டு தயாரிக்க தேவையான வேதியியல் மூலப்பொருட்கள் அவரது இல்லத்திலும் கைப்பற்றப்பட்டன. இதனால், சதி செயலுக்காக முயன்றாரா..? என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கோவையில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், கார் வெடித்த சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற வானதி சீனிவாசன், அங்குள்ள ஈஸ்வரன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- வாழ்த்து சொல்லாட்டியும் பரவாயில்ல. பயங்கரவாத தாக்குதல் ஆரம்ப முயற்சி தவிர்க்கப்பட்டுள்ளது.

நூற்றுக்கணக்கான மக்களை கொல்ல மேற்கொள்ளப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. இறைவன் அருளால் மக்கள் காப்பற்றப்படுள்ளார்கள். இறைவனுக்கு நன்றி சொல்ல வந்துள்ளோம். தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர்கள் யாரும் கோவை வரவில்லை

மைனாரிட்டி மக்கள் ஓட்டுக்காக பொதுமக்கள் பாதிக்கப்படும் பயங்கரவாத நடவடிக்கைகளை அனுமதிப்பாரா..? என்ஐஏ விசாரணை ஏற்கனவே இருந்தாலும் தமிழக உளவுத்துறை உஷாராக இருந்திருக்க வேண்டும். பயங்கரவாத செயலில் ஈடுபட்டு சிறையில் உள்ளவர்களை வெளியே விட கோரிக்கை வைப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. மாநில முதல்வர் கோவை வந்து மக்களை சந்திக்க வேண்டும்.

மக்களின் உயிரோடு அரசியல் செய்யாதீர்கள். கோவை மக்களுக்கு ஆதரவு சொல்ல யாரும் இல்லை. மாநில முதல்வர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. பண்டிகைக்கு கூட வாழ்த்து சொல்லவில்லை. இதை பற்றி முதல்வர் வாயை திறக்காமல் இருப்பது கடுமையான கண்டனத்திற்கு உரியது. ஏன் வாயை திறக்க மறுக்கிறார்..? பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக இருக்கக் கூடியவர்கள் உள்ளார்கள் எனபது முதல்வருக்கு தெரியுமா?

75 கிலோ வெடிபொருட்கள் எடுக்கப்பட்டுள்ளது சாதாரண விஷயம் இல்லை. வழக்கை என்ஐஏவிடம் ஒப்படைக்க வேண்டும். கவுரவம் பார்க்காமல் தமிழக முதல்வர் இந்த வழக்கை என்ஐஏவிடம் ஒப்படைக்க வேண்டும். தமிழக உளவுத் துறை செயலிழந்துள்ளது, என தெரிவித்துள்ளார்.

  • ajith-sir-gives-the-title-good-bad-ugly-said-by-adhik-ravichandran டைட்டில் வச்சதே அஜித்சார்தான்- ஆச்சரிய தகவலை பகிர்ந்த ஆதிக் ரவிச்சந்திரன்