வயதானால் காதல் வரக்கூடாதா? 24 வயது மனைவியுடன் குழந்தை பெற்றுக்கொள்வேன்.. நடிகர் பப்லு பரபரப்பு பேட்டி!!

Author: Udayachandran RadhaKrishnan
26 October 2022, 5:24 pm

சின்னத்திரை நடிகர் பப்லு 24 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என்கிற விஷயம் தான் சோஷியல் மீடியாவில் ஹா ட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகின்றது.

இது குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பப்லு அளித்த பேட்டியில், என் முதல் மனைவி பீனாவை நான் காதலித்துத் தான் திருமணம் செய்து கொண்டேன். எங்கள் இருவருக்கும் பிறந்த மகன் அகத். அவனுக்கு ஆட்டிசம் குறைபாடு உள்ளது என்று உங்கள் அனைவருக்கும் தெரியும்.

நானும் எனது மனைவியும் நண்பர்களாக இருந்து திருமணம் செய்து கொண்டதால், எங்களால் வாழ்க்கையில் இணைந்து பயணிக்க முடியவில்லை. தினமும் ச ண் டை வந்த காரணத்தால், நான் தனியாக வந்து விட்டேன். ஆனால், மாதத்திற்கு ஒரு நாள் என் மகனை வெளியில் சென்று சந்திப்பேன். கடந்த 6 வருடமாக தனியாகத் தான் வசித்து வருகிறேன்.

இதனால் எனக்கு மன அழுத்தம், வலி என மனதளவில் நான் மிகவும் பாதிக்கப்பட்டேன். அத்தோடு மன அழுத்த த்தால் திடீரென இறந்து விட்டால் என்ன செய்வது என்று பல நாள் வீட்டின் கதவு, ஜன்னல்களைக் கூட திறந்து வைத்துக் கொண்டு தூங்கி இருக்கிறேன்.

மேலும் இப்படி ஒரு சூழ்நிலையில் தான் நான் அந்த பெண்ணை சந்தித்தேன். அந்த பெண் என்னை விரும்புகிறாள். எனக்கு பின் தனது மகனை அவள் நிச்சயம் பார்த்துக் கொள்வாள் என்ற நம்பிக்கை இருக்கிறது. வயது என்பது ஒரு நம்பர் தான். நான் இப்போதும் அழகாகவே இருக்கிறேன்.

வயதானவனை ஏன் காதலித்தாய் என்று நானும் அந்த பெண்ணிடம் பல முறை கேட்டு இருக்கிறேன். அதற்கு அவள் உங்களின் வயது எனக்கு ஒரு பெரிய விஷயமாக தெரியவில்லை. நீங்கள் மட்டும் தான் எனக்கு தெரிகிறீர்கள் என்று கூறுவாள். என் முதல் மனைவி பீனாவிடம் இரண்டாவதாக குழந்தை பெற்றுக்கொள்வது பற்றி பல முறை பேசி இருக்கிறேன். ஆனால், அவளோ என் மகனின் நிலைமையை பார்த்து வேண்டாமென்று மறுத்து விட்டாள்.

ஆனால், இந்த பெண்ணுடன் இரண்டாவதாக குழந்தை பெத்துக் கொள்ள நான் விரும்புகிறேன். எனக்கு அந்த ஆசை இருக்கிறது. எனினும் அது மட்டும் இல்லாமல் நான் 24 வயது பெண்ணை திருமணம் செய்தால் யாருக்கு என்ன பிரச்சனை. இந்த வயதில் தான் காதல் வரணும். வயதானால் காதல் வரக்கூடாது என்று ஏதாவது இருக்கிறதா..? என பல கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

என் முதல் மனைவி பீனாவிடம் இந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வது பற்றி பேசினேன். அவர், இரண்டாம் திருமணத்திற்கு எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. அத்தோடு 24 வயது பெண் என்பது தான் பீனாவிற்கு வருத்தம்.

இத்தனை ஆண்டுகள் விவாகரத்து வாங்காமல் பிரிந்து இருந்தோம். இனி விவாகரத்து செய்து கொள்ளலாம் என்று கூறினார். ஏற்கனவே 6 வருடங்கள் பிரிந்து இருந்ததால் ஒரு மாதத்திலேயே எளிதாக டைவர்ஸ் கிடைத்து விட்டது.

இன்னும் இருவருக்கும் திருமணம் நடக்கவில்லை, இருவரும் லிவ்விங் டு கெதர் ரிலேஷன் ஷிப்பில் தான் இருக்கிறோம். கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்வோம். அத்தோடு நான் யாருக்கும் எப்போதும் துரோகம் செய்தது இல்லை. அதே போல இந்த பொண்ணுக்கும் துரோகம் செய்ய மாட்டேன் என்று நடிகர் பப்லு தனது இரண்டாவது திருமணம் குறித்து விளக்கம் கொடுத்தார்.

  • Bigg Boss Anshitha akbarsha Pregnant அன்ஷிதா 3 மாதம் கர்ப்பமா? பிக் பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்குது?!
  • Views: - 630

    1

    0