ஊராட்சிமன்ற அலுவலகத்திற்குள் புகுந்து பட்டாசு வெடித்த இளைஞர்கள் ; மதுபோதையில் அராஜகம்… அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்..!

Author: Babu Lakshmanan
26 October 2022, 6:05 pm

தூத்துக்குடி ; கோவில்பட்டி அருகே ஊராட்சி மன்ற அலுவலகத்தின் பூட்டை உடைத்து அலுவலகத்திற்குள் புகுந்து இளைஞர்கள் பட்டாசு வெடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ளது வடக்கு இலந்தைக்குளம். இந்த கிராமத்தில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தின் பூட்டை மர்ம நபர்கள் உடைத்து அங்கு பட்டாசு வைத்து வெடித்துள்ளனர். இதில் அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் முற்றிலும் உடைந்து சேதமடைந்துள்ளன.

இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் கணபதி கயத்தாறு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மது போதையில் சில இளைஞர்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பட்டாசு வெடித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

https://player.vimeo.com/video/764138346?h=1d4fdacb75&badge=0&autopause=0&player_id=0&app_id=58479
  • ags condition for producing str 50 பிரச்சனையையே போர்வையாக போர்த்திக்கொண்டு தூங்கும் சிம்பு பட இயக்குனர்! மீண்டும் மீண்டுமா?