பொறியியல் படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு கால அவகாசம் : தேதியை நீட்டித்து தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அறிவிப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan26 October 2022, 10:02 pm
பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான கால அவகாசம் நவம்பர் 20ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
பொறியியல் படிப்பு சேர்க்கைக்கான ஆன்லைன் கலந்தாய்வு நடந்து வருகிறது. மூன்றாவது கட்ட கலந்தாய்வின் முடிவுகள் இந்த வார இறுதியில் வெளியாக உள்ளன.
இதற்கிடையே அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் சிறப்பு இட ஒதுக்கீட்டின் கீழ் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்து வருகின்றனர். இவர்களுக்கான கட்டணம் நவம்பர் மூன்றாவது வரத்தில் சம்பந்தப்பட்ட தனியார் கல்லூரிகளுக்கு செலுத்தப்படும் என தொழில் நுட்ப கல்வி இயக்குனர்கள் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், பொறியியல் மாணவர் சேர்க்கை பணிகள் நவம்பர் 13-ஆம் தேதியுடன் முடிவடையும் என்று திட்டமிட்டு இருந்த நிலையில் , தற்போது நவம்பர் 20ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டிருப்பதாகவும் தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.