திறமை வாய்ந்தவர் பிரதமர் மோடி… இந்திய வெளியுறவுக் கொள்கை குறித்து ரஷ்ய அதிபர் புதின் புகழாரம்..!!

Author: Babu Lakshmanan
28 October 2022, 10:27 am

நாட்டின் நலனுக்காக சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் திறமை கொண்டவர் பிரதமர் மோடி என்று ரஷ்ய அதிபர் புதின் பாராட்டியுள்ளார்.

மாஸ்கோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கலந்து கொண்டார். அப்போது, அவர் பேசியதாவது ;- இந்தியாவில் பிரதமர் மோடியின் தலைமையில் நிறைய செய்யப்பட்டுள்ளது. அவர் தனது நாட்டின் தேசபக்தர். ‘மேக் இன் இந்தியா’ என்ற அவரது திட்டம் பொருளாதார ரீதியாகவும் நெறிமுறையிலும் மிக முக்கியமானது. அதன் எதிர்காலம் இந்தியாவுக்கே சொந்தம், இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்பதில் பெருமை கொள்ளலாம்.

உள்நாட்டில் சில தடுப்பு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வரும் வேளையில், நாட்டின் நலனுக்காக சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் திறமை வாய்ந்தவர். பிரிட்டிஷ் காலனி நாடாக இருந்து நவீன நாடாக மாறியுள்ள இந்தியா வளர்ச்சியில் மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளது. இந்திய மக்கள் மற்றும் உறுதியான வளர்ச்சியே, அனைவருக்கும் இந்தியா மீதான மரியாதை மற்றும் அபிமானத்தை வழங்குகின்றன.

இந்தியாவுடன் எங்களுக்கு (ரஷியாவிற்கு) சிறப்பான உறவு உள்ளது. இது பல தசாப்தங்களாக நெருங்கிய நட்பால் உருவாக்கப்பட்டது. நாங்கள் ஒருபோதும் கடினமான சிக்கல்களை எதிர்கொண்டதில்லை. எதிர்காலத்தில் இது நடக்கும் என்று நான் நம்புகிறேன். இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பு அதிகரித்து வருகிறது, என தெரிவித்துள்ளார்.

  • Ilaiyaraja Talk About Yuvanshankar raja யுவன்சங்கர் ராஜாவை மேடையில் பங்கம் செய்த இளையராஜா.. ராஜா ராஜாதான் யா..!!