பேன்சி ஸ்டோரை சூறையாடிய மர்ம கும்பல் ; பணியாளர் மீதும் தாக்குதல்.. வெளியானது அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்… போலீசார் விசாரணை

Author: Babu Lakshmanan
28 October 2022, 3:49 pm

புதுக்கோட்டை அருகே பேன்சி ஸ்டோர் ஒன்றை ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று அடித்து நொறுக்கி, அதில் பணியாற்றிய வந்தவரை அடித்துச் சென்ற சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

புதுக்கோட்டை பெரியார் நகரை சேர்ந்தவர் பாலமுருகன். இவர் அந்த பகுதியில் பேன்சி ஸ்டோர் ஒன்றை நடத்தி வருகிறார். இவருடைய கடையில் கோபாலகிருஷ்ணன் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், நேற்று மதியம் இவரது கடைக்கு வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று கடையில் இருந்த கோபாலகிருஷ்ணனை தாக்கி விட்டு கடையை அடித்து நொறுக்கி விட்டு சென்றதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, வெளியே சென்று இருந்த பாலமுருகன் திரும்பி வந்து பார்த்தபோது, கடை நொறுக்கப்பட்டு கடையில் பணியாற்றிய தனது உறவினர் கோபாலகிருஷ்ணன் தாக்கிச் சென்ற விவரம் அறிந்தவர் அதிர்ச்சியூட்டு காவல் துறைக்கு தகவலைத்தார்.தகவலின் பெயரில் காவல்துறையினர் விரைந்து வந்து விசாரணை செய்து வருகின்றனர்.

ஏற்கனவே நகராட்சி கவுன்சிலர் தேர்தலில் இவர் சுயேட்சை வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும், அதனால் ஒரு சிலருடன் முன்விரோதம் ஏற்பட்டிருந்ததாகவும், அவர்கள் தனது கடையை அடித்து நொறுக்கி இருக்கலாம் என்று காவல்துறையிடம் பாலமுருகன் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து, அந்த கோணத்தில் காவல்துறையினர் தற்போது விசாரணை செய்து வருகின்றனர்

ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் கடையை அடித்து நொறுக்கிய சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி உள்ளது

  • Attakathi Dinesh latest news கெத்து காட்டும் அட்டகத்தி தினேஷ்…கிடுகிடுவென சம்பளத்தை உயர்த்தி அசத்தல்…!