பால் வியாபாரம் செய்த இளைஞரை கடத்தி கொலை செய்த திமுக ஊராட்சி மன்ற தலைவர் : முன்விரோதம் காரணமாக அரங்கேறிய கொடூரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
29 October 2022, 9:13 pm

சோழவரம் அருகே தி.மு.கவைச் சேர்ந்த அலமாதி ஊராட்சி மன்ற தலைவரின் தம்பி மற்றும் அவரது கூட்டாளிகளால் கடத்தப்பட்டு கொலை வெறி தாக்குதலுக்கு ஆளான முரளி என்பவர் மருத்துவமனையில் சிகிச்சைப்பலன்றி உயிரிழப்பு

திருவள்ளூர் மாவட்டம்,சோழவரம் அருகே அலமாதி ஊராட்சியில் அடங்கிய எடப்பாளையம் கிராமத்தில் வசிப்பவர் வத்சலா க/பெ ராஜகோபால். இவரது மகன் 23 வயதான முரளி. கால்நடைகளை வளர்த்து பால் வியாபாரம் செய்து வருகிறார்.

முரளிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அலமாதி ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வரும் தமிழ்வாணனுக்கும் முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்வாணன் அவரது தம்பி மற்றும் கூட்டாளிகளை ஏவி விட்டு எடப்பாளையம் அருகே மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த முரளியை அவரது தாய் வத்சலா கண் முன்னே மூன்று சக்கர வாகனங்களில் வந்து கத்தி முனையில் அங்கிருந்து கடத்திச் சென்றுள்ளனர்.

உடனே வத்சலா செய்வதறியாது திகைத்து ஊராட்சி மன்ற துணைத் தலைவர் முனுசாமி என்பவருக்கு தகவல் அளித்து அவருடன் கடத்திச் சென்ற முரளியை தேடி உள்ளனர்.

அலமாதி பிரியாணி குடோன் அருகே மூன்று இரு சக்கர வாகனங்களில் ஒருவரை ஏரிக்கரை பக்கமாக அழைத்து சென்றதாக பகுதியில் உள்ளவர்கள் கூறியுள்ளனர்.

ஏரிக்கரை அருகே சென்று பார்த்தபோது அங்கே முரளியை கத்தி உருட்டு கட்டை உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் திலீப் மட்டும் அவரது கூட்டாளிகள் தாக்கிக் கொண்டு இருந்துள்ளனர்.

வத்சலா மற்றும் அவருடன் சென்றவர்களை கண்டதும் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த முரளியை அழைத்துச் சென்று சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.அங்கு சிகிச்சை பலனின்றி முரளி இறந்துள்ளார்.

இது குறித்து சோழவரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
கொலைக்கு காரணமான ஊராட்சி மன்ற தலைவர் மீதும் தாக்குதல் நடத்திய அவர் தம்பி திலீப் மற்றும் கூட்டாளிகள் மீதும் நடவடிக்கை உடனடியாக எடுக்க வேண்டும் எனக் கூறி உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.

  • A man fraud in the name of Sunny Leone சன்னி லியோன் பெயரில் இப்படி ஒரு மோசடியா? அதிர்ந்த அரசு!
  • Views: - 520

    0

    0