முன்னாள் அமைச்சர்களின் கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்து : தேவர் ஜெயந்தி விழாவுக்கு சென்ற போது நிகழ்வு!!

Author: Udayachandran RadhaKrishnan
30 October 2022, 11:08 am

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா, 60-வது குருபூஜை விழா ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் இன்று விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தேவர் குருபூஜை விழாவையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள், அமைப்புகளை சேர்ந்தவர்கள் அவரது சிலைக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்பதற்காக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பசும்பொன் சென்றுகொண்டிருந்தனர்.

மானாமதுரை அருகே சென்ற போது முன்னாள் சென்ற வாகனம் திடீரென பிரேக் அடித்ததால் அமைச்சர்கள் பாஸ்கரன் மற்றும் காமராஜ் சென்ற வாகனம் ஒன்றோடொன்று போது விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. வாகனங்களில் முன்பகுதி மட்டும் சேதமடைந்துள்ளது. பசும்பொன் சென்ற போது ஈ.பி.எஸ். தரப்பு வாகனங்கள் விபத்தில் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Good Bad Ugly Hit of Flop குட் பேட் அக்லி படம் ஹிட்டா? இல்லையா? இன்னும் எவ்வளவு கோடி வசூல் செய்யணும்?