கோவையில் கார் வெடிப்பு சம்பவம் : கோட்டை ஈஸ்வரன் கோவில் பூசாரியிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை!!

Author: Udayachandran RadhaKrishnan
30 October 2022, 1:41 pm

கோவையில் காரில் சிலிண்டர் வெடித்த இடத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

கோவை, உக்கடம், கோட்டை ஈஸ்வரன் கோவில் முன், அக்டோபர் 23 ல் நடந்த காரில் சிலிண்டர் வெடித்ததில், காரை ஒட்டி வந்த ஜமேஷா முபின் பலியானார். விசாரணையில் முக்கிய இடங்களில் குண்டு வைப்பதற்கு சதித் திட்டம் தீட்டி செயல்பட்டது தெரியவந்தது.

இதில், தொடர்புடைய ஆறு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இது தொடர்பாக என்.ஐ.ஏ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்நிலையில் தேசிய புலனாய்வு முகமையின் எஸ்.பி மற்றும் விசாரணை குழுவினர் இன்று காலை கோட்டை ஈஸ்வரன் கோவிலில் சம்பவம் நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

கோவில் பூசாரி சுந்தரேசனிடம் விசாரணை நடத்தப்பட்டது. வழக்கு தொடர்பான பல்வேறு விபரங்களையும் சேகரித்தனர்.

  • what is the problem on sikandar salman khan asks people படத்துல என்ன பிரச்சனை, உங்க கருத்தை சொல்லுங்க- பப்ளிக்கை நேரடியாக சந்தித்த சல்மான் கான்!