முத்து முத்தாக வியர்த்த முருகன் சிலை : புகழ்பெற்ற சிக்கல் சிங்காரவேலர் ஆலயத்தில் நடந்த அதிசய காட்சி… பக்தி பரவசத்தில் பக்தர்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
30 October 2022, 2:43 pm

நாகை மாவட்டம் சிக்கலில் அமைந்துள்ள சிங்காரவேலர் ஆலயம் மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற ஒன்றாகும். திருச்செந்தூரில் சங்காரம் செய்ய சிக்கலில் வேல் வாங்கியதாக புராண வரலாறு கூறுகிறது இதற்கான கந்த சஷ்டி பெருவிழா பெற்ற சிக்கல் சிங்காரவேலவர் கோவில் கடந்த 25,ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது.

நாள்தோறும் கோவில் வளாகத்தின் உள்ளேயே சுவாமி ஊர்வலம் நடைபெற்று வந்தது. இந்நிலையில் சிக்கல் சிங்காரவேலவர் கோவிலின் முக்கிய திருவிழாவான அம்பாளிடம் முருகன் சக்தி வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

முருகப்பெருமான் அலங்கரிக்கப்பட்டு கார்த்திகை மண்டபத்திற்கு எழுந்தருளினார். மகா தீபாராதனைக்கு பிறகு முருகப்பெருமான் அஜபா நடனத்துடன் ஆலயத்தினுள் வலம் வந்தார் அப்போது அம்பாள் வேல்நெடுங்கண்ணி சன்னதியில் இருந்து சக்திவேலை முருகனிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடர்ந்து சுவாமிகளுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. அப்போது முருகன் சிலைக்கு முத்து முத்தாக வியர்க்கும் அபூர்வ நிகழ்வு நடைபெற்றது. கோவிலின் வெளியே காத்திருந்த பக்தர்கள் கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா என்ற பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.

அப்போது ஐம்பொன்னால் செய்யப்பட்ட முருகன் சிலையின் முகத்தில் முத்துமுத்தாக வியர்வை அரும்பும் மகிமை பக்தர்களால் அதிசயமாகவும் பார்க்கப்படுகிறது.

  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!