கர்ப்பமாக இருக்கும் போது விரதம் இருக்கலாமா கூடாதா…???
Author: Hemalatha Ramkumar30 October 2022, 7:01 pm
நீங்கள் கர்ப்பமாக இருந்தால் விரதம் இருக்கலாமா என்பது கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான கேள்வி. கர்ப்பம் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ஒரு நிலை ஆகும். நீங்கள் விரதம் இருக்கலாமா கூடாதா என்பதற்கான பதில் உங்கள் கர்ப்ப நிலையைப் பொறுத்தது. நீங்கள் முதல் மற்றும் இரண்டாவது ட்ரைமெஸ்டர்களில் இருந்தால், விரதத்தை மேற்கொள்ளலாம். ஆனால் உங்கள் மருத்துவரின் பரிந்துரைக்கு பிறகு மட்டுமே.
பொதுவாக செய்யப்படும் விரதத்தின் பாரம்பரிய வழியை பின்பற்றுவதற்கு பதிலாக, புரதத்தின் நல்ல ஆதாரங்களுடன் கூடிய அதிகாலை சமச்சீரான உணவைச் சேர்க்கவும். உணவுடன் சிறிது இளநீரையும் சேர்த்துக்கொள்ளுங்கள். மேலும், அதிக அமிலத்தன்மையைத் தடுக்க பழங்களைச் சேர்க்க முயற்சிக்கவும்.
நீங்கள் மூன்றாவது ட்ரைமெஸ்டரில் இருந்தால், விரதத்தை மேற்கொள்ள வேண்டாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில் இந்த மாதங்களில், குழந்தைக்கு உங்கள் ஊட்டச்சத்து ஆதரவு அதிக அளவில் தேவைப்படுகிறது.
நீங்கள் கர்ப்பமாக இருக்கும்போது உங்கள் உடலை மட்டுமல்ல, உங்கள் குழந்தைக்கும் ஊட்டமளிக்கிறீர்கள். உணவு அல்லது தண்ணீர் இல்லாமல் இருக்கும் போது உங்கள் இரத்த சர்க்கரை அளவு உயரலாம். மேலும் இதனால் தலைச்சுற்றல் ஏற்படலாம். உங்களுக்கு ஏதேனும் கர்ப்பப் பிரச்சினைகள், கர்ப்பகால நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் போன்றவை இருந்தால், விரதம் ஒரு போதும் இருக்கக்கூடாது. ஏனெனில் இது உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும்.
ஒரு கர்ப்பிணிப் பெண்ணாக, உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு நீங்கள் முன்னுரிமை கொடுக்க வேண்டும். விரதத்தை முற்றிலுமாக கைவிட வேண்டும் என்பதே நான் உங்களுக்கு செய்யும் முதல் பரிந்துரை. நீங்கள் இன்னும் வழக்கத்தைப் பின்பற்ற விரும்பினால், உங்கள் தற்போதைய நிலைக்கு விழாக்களை மாற்றவும்.
0
0