அஜித்தால் அந்த ஒரு விஷயத்தில் விஜய்யை நெருங்க கூட முடியாது: சர்ச்சையை கிளப்பிய பிரபலம்..!

Author: Vignesh
3 November 2022, 10:45 am

தமிழ் சினிமாவில் இரு துருவங்களாக இருப்பவர்கள் விஜய் மற்றும் அஜித். என்னதான் இவர்கள் இருவரும் நண்பர்கள் என சொல்லப்பட்டாலும் ரசிகர்கள் இவர்களை போட்டி நடிகர்களாகவே பார்க்கின்றனர். இருவரின் திரைப்பயணமும் ஒன்றாகவே அமைந்தது மட்டுமல்லாமல் இருவரும் சரிசமமான ரசிகர்களை கொண்டுள்ளனர்.

இந்நிலையில் இவர்கள் பல வருடங்கள் கழித்து மீண்டும் நேருக்கு நேர் மோதவுள்ளது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு ஜில்லா மற்றும் வீரம் ஆகிய படங்கள் ஒரே நேரத்தில் வெளியானது.

ajith and vijay updatenews360(1)

அதன் பிறகு தற்போது விஜய்யின் வாரிசு திரைப்படமும் அஜித்தின் துணிவு திரைப்படமும் அடுத்தாண்டு பொங்கலுக்கு ஒன்றாக வெளியாகவுள்ளது. எனவே யார் படம் அதிக வசூலை ஈட்டும் என இவர்களின் ரசிகர்கள் தற்போதே மோதலை துவங்கியுள்ளனர்.

இந்நிலையில் அஜித்தின் துணிவு படத்தை விட வாரிசு தான் அதிக வசூலை ஈட்டும் எனவும், அஜித்தால் விஜய்யை நெருங்கமுடியாது எனவும் பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவர் கூறியதாவது ,ஜில்லா மற்றும் வீரம் திரைப்படங்கள் வெளியானபோது இருவரும் சமபலத்தில் இருந்தனர். ஆனால் அதன் பின் விஜய் அதிக கமர்ஷியல் படங்களை கொடுத்து வசூல் சக்ரவர்த்தியாக வலம் வருகின்றார். மேலும் கடைசியாக வெளியான இவர்கள் படங்களை எடுத்துப்பார்த்தால் வலிமை படத்தை விட பல மடங்கு பீஸ்ட் திரைப்படம் வசூல் செய்துள்ளது.

ajith----updatenews360

இந்நிலையில் அயல்நாட்டில் கூட வாரிசு படம் தான் அதிக தொகைக்கு வியாபாரம் ஆகியுள்ளது. மேலும் துணிவு திரைப்படத்தின் வியாபாரம் மந்தமான நிலையில் தான் உள்ளது. எனவே விஜய்யின் வாரிசு திரைப்படம் தான் அஜித்தின் துணிவை விட அதிக வசூலை ஈட்டும் என கூறியுள்ளார் பிஸ்மி என்பது குறிப்பிடத்தக்கது.

  • anthanan on vijay fadwa statement by muslim organization விஜய்க்கு ஒரு நியாயம் விஜயகாந்துக்கு ஒரு நியாயமா? ஃபத்வாவில் ஏன் பாரபட்சம்! பொங்கிய பிரபலம்