கையில் சூடம் ஏற்றி விஜய்க்கு ஆரத்தி எடுத்த தீவிர ரசிகர் : வாரிசு பட பாடலை வரவேற்ற வீடியோ வைரல்!!
Author: Udayachandran RadhaKrishnan3 November 2022, 8:29 pm
வாரிசு படத்தின் முதல் SINGLE PROMO வெளியான நிலையில் அதை வரவேற்கும் விதமாக ரசிகர் கையில் சூடம் ஏற்றிய வீடியோ வைரலாகி வருகிறது.

நடிகர் விஜய் நடித்த வெளிவருக்கும் வாரிசு திரைப்படத்தின் முதல் பாடல் நவம்பர் ஐந்தாம் தேதி வெளியிட உள்ள நிலையில், இன்று மாலை 6.30 மணிக்கு விஜய் குரலில் பாடிய ரஞ்சிதமே என்ற பாடல் பிரமோ வெளியானது.
இந்நிலையில் மதுரை சேர்ந்த விஜய் ரசிகர் ஒருவர் தன் கையில் சூடம் ஏற்றி டிவி முன்பு விஜயின் பெயர் மற்றும் விஜயின் நடனமாடும் காட்சி வரும்போது போது தெய்வத்தை வழிபடுவது போல் வழிபட்டார்.