ஆர்.எஸ்.எஸ் பேரணி ஓர் ஆபத்தான அறிகுறி… இது நல்லதல்ல : திருமாவளவன் ‛பளீச்’..!

Author: Vignesh
6 November 2022, 12:50 pm

போரூர்: பாஜக பேரணியை எதிர்த்தது இல்லை, ஆர்எஸ்எஸ் பேரணியை எதிர்க்கிறோம் என திருமாவளவன் கூறினார்.

ஆர்.எஸ்.எஸ். பேரணி இன்று தமிழகம் முழுவதும் நடைபெற இருந்தது. இந்த பேரணிக்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி இருந்தது. இந்நிலையில், பேரணியை சுற்றுச்சுவர் கொண்ட மைதானத்துக்குள் நடத்த வேண்டும் என்ற நிபந்தனை வழங்கியதால் ஆர்.எஸ்.எஸ் பேரணியை தள்ளி வைத்து விட்டு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த சூழ்நிலையில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த இருந்த இன்று முன்னதாக 1 லட்சம் மனுஸ்மிருதி புத்தகங்களை தனது கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் வழங்கப்போவதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில், அறிவிப்பின் படி அவர் “மனுஸ்மிருதி” புத்தகங்களை வழங்கி வருகிறார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-

“ஆர்.எஸ்.எஸ். பேரணியை தான் எதிர்க்கிறோம்”, ஆர்.எஸ்.எஸ் எப்படிப்பட்ட இயக்கம் என்பதை தமிழக மக்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். பாஜக பேரணியை இதுவரை நாங்கள் எதிர்த்தது இல்லை, ஆனால் ஆர்எஸ்எஸ் பேரணியை எதிர்க்கிறோம், மக்கள் ஆர்.எஸ்.எஸ் பற்றி புரிந்து கொண்டால் இந்தியாவிலேயே அது இருக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

  • ags condition for producing str 50 பிரச்சனையையே போர்வையாக போர்த்திக்கொண்டு தூங்கும் சிம்பு பட இயக்குனர்! மீண்டும் மீண்டுமா?