14 வயதில் குடும்ப பாரத்தை சுமக்கும் சிறுமி.. உதவியை எதிர்பார்த்த சிறுமிக்கு அமைச்சர் அளித்த உறுதி..!

Author: Vignesh
7 November 2022, 5:21 pm

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை அடுத்த புளியங்கண்ணு கிராமத்தில் குடுகுடுப்பை சமூகத்தை சேர்ந்த பாபு மற்றும் மல்லிப்பூ ஆகிய தம்பதிக்கு மூத்த மகன் பழனி (20) மகள் செல்வி(14) ஆகியோருடன் சிறிய ஓலை குடிசை வீட்டில் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மல்லிப்பூ கணவர் பாபு சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துள்ள நிலையில் மல்லிப்பூ தனது இரண்டு பிள்ளைகளை படிக்க வைத்துக் கொண்டு வீதி வீதியாக சென்று பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் சுருக்கு பை போன்றவற்றை விற்பனை செய்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளார்.

மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் மல்லிப்பூ கால்கள் முறிவு ஏற்பட்டு உடைந்த நிலையில் அவர் தொடர்ந்து வியாபாரத்திற்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கினர்.

ranipet student - updatenews360

இந்த சூழலில் குடும்ப வறுமை சூழ்நிலை காரணமாக இவர்களது மகன் பழனி பள்ளிப்படிப்பை நிறுத்தி விட்டு குடுகுடுப்பை தொழிலினை மேற்கொண்டு வரும் நிலையில் தற்போது போதிய வருமானம் அதில் கிடைக்காத காரணத்தினால் குடும்பத்தை நடத்த வேண்டும் என்பதற்காக மல்லிப்பூ மகளான செல்வி 9-ஆம் வகுப்பு வரை அதே கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் கல்வி பயின்று வந்த நிலையில் தற்போது குடும்ப வறுமை சூழ்நிலை காரணமாக பள்ளி படிப்பை தற்போது நிறுத்திவிட்டு தனது தாயார் மேற்கொண்டு வந்த பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் சுருக்குப்பை வியாபாரத்தினை வீதி வீதியாக தலையில் சுமந்தவாறு நடந்து சென்று விற்பனை செய்வதன் மூலமாக வரக்கூடிய வருமானத்தைக் கொண்டு அவர்களது குடும்பத்தை காப்பாற்றி வருகிறார்

இந்நிலையில் 14 வயதுடைய செல்வி தொடர்ந்து கல்வி பயில வேண்டும் என்ற ஆர்வமும் கனவும் உள்ள நிலையில் குடும்ப வறுமை சூழ்நிலை காரணமாக பள்ளிப்படிப்பை கைவிடப்பட்ட நிலையில் தற்பொழுது வீதி வீதியாக பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் சுருக்கு பைகளை தலையில் சுமந்தவாறு விற்பனை செய்து வரும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார்

ranipet student - updatenews360

மேலும் செல்வி தொடர்ந்து பள்ளி படிப்பை முடித்து கல்லூரி படிப்புகளை படிக்க வேண்டும் என ஆசைப்படுவதாகவும் அவருக்கு அரசு உதவ முன் வர வேண்டும் எனவும் செல்வி மற்றும் அவர்களது குடும்பத்தினர் மற்றும் அந்த கிராமப் பகுதியை சேர்ந்த குடுகுடுப்பைக்கார சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆகியோர் அரசிற்கு கோரிக்கையாக கண்ணீர் மல்க முன் வைக்கின்றனர்.

பின்னர் கோரிக்கையை ஏற்று மாநில கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி மற்றும் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் தலைமையில் சென்ற குழு பாதிக்கப்பட்ட நபர்களின் வீட்டுக்கு நேரடியாக சென்று அரசு நலத்திட்ட உதவிகள் மற்றும் சிறுமி படிப்பதற்கான முழு படிப்பிற்கான செலவு மேலும் அவர்களுக்காக மாத குடும்ப உதவித்தொகை பாதிக்கப்பட்ட பெண்ணின் மகனுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்பு உள்ளிட்ட நல திட்ட உதவிகளை வழங்குவதாக அமைச்சர் காந்தி உறுதியளித்தார்

ranipet student - updatenews360

அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அந்த மாணவியை உடனடியாக பள்ளி அழைத்து சென்று புத்தகங்களை வழங்கி பள்ளியில் அமர வைத்து மாணவிக்கு அறிவுரை வழங்கினார்.

  • Sivakarthikeyan transition from TV to big screen சீரியல் வாய்ப்புக்கு ஏங்கிய சிவகார்த்திகேயன்..NO சொன்ன சின்னத்திரை நடிகர்..!
  • Views: - 433

    0

    0