தினமும் காகத்திற்கு சாப்பாடு வைப்பீங்களா… இந்த தப்ப மட்டும் பண்ணிடாதீங்க!!!
Author: Hemalatha Ramkumar7 November 2022, 5:19 pm
காகத்திற்கு உணவளிப்பது பலரின் வழக்கம். ஒரு சிலர் தினமும் காகத்திற்கு உணவு வைத்து விட்டு தான் சாப்பிடுவார்கள். இன்னும் சிலர் வெள்ளி, செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் காகத்திற்கு உணவு வைப்பதுண்டு. பெரும்பாலான வீடுகளில் விசேஷங்களின் போது காகத்திற்கு உணவு வைத்துவிட்டு தான் சாப்பிடுவார்கள். ஆனால் காகத்திற்கு உணவளிப்பதால் பாவம் வரக்கூடும் என்ற ஒரு கருத்தும் உள்ளது.
அதுவும் காகத்திற்கு குறிப்பிட்ட இரண்டு உணவுகளை மட்டும் வைக்கக்கூடாது. காக்கை என்பது சனி பகவானின் வாகனம். அது மட்டும் இல்லாமல் காகம் என்பது எமதர்மருக்கு பிடித்தமான வாகனம். எமலோகத்தின் வாசலில் காகம் இருப்பது ஐதீகம்.
காகம் என்பது மனிதர்களுடன் எளிதாக பழகும் தன்மை கொண்டதாக கருதப்படுகிறது. ஆன்மீகத்திலும் காகத்திற்கு தனி இடம் உண்டு. காகத்திற்கு உணவு வைப்பதன் முக்கிய காரணமே நமது முன்னோர்கள் காக்கை வடிவத்தில் உள்ளார்கள் என சாஸ்திரங்கள் கூறுவதே ஆகும். விபத்துகள், அசம்பாவிதங்கள், முன்ஜென்ம பாவங்கள் போன்றவை காக்கைக்கு உணவளிப்பதால் தடுக்கப்படும் என்பது நம்பிக்கை.
வீட்டு ஜன்னல் அல்லது வாசலில் காகம் கரைந்தால் வீட்டில் லட்சுமி கடாக்ஷம் வந்தடைவதாக கூறப்படுகிறது. மேலும் காகம் கரைந்தால் வீட்டிற்கு விருந்தினர்கள் வருவார்கள் என்றும் நல்ல செய்தி வந்துசேரும் என்றும் நம்பப்படுகிறது. காகத்திற்கு ஒருபோதும் அசைவ உணவுகள் வைக்கக்கூடாது. மாமிசம் சாப்பிடக்கூடிய பறவையாக இருந்தாலும்கூட நம் கைகளால் மாமிச உணவுகளை வைக்கக்கூடாது. அடுத்தபடியாக, எச்சில் பண்டத்தையோ அல்லது பழைய உணவையோ வைக்கக்கூடாது. ஏனெனில் இதனை செய்தால் நமக்கு அளவற்ற பாவங்கள் வந்துசேரும்.