துபாய்க்கு போய் Photo Shoot நடத்திய பிக்பாஸ் ஜோடி : வைரலாகும் காதல் போட்டோஸ்..!

Author: Vignesh
9 November 2022, 7:45 pm

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 5ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் பாவனி ரெட்டி. அவர் விஜய் டிவியில் ரெட்டைவால் குருவி, சின்னத்தம்பி உள்ளிட்ட பல தொடர்களில் நடித்து இருக்கிறார்.பிக் பாஸ் ஷோவில் பங்கேற்ற முதல் வாரத்திலேயே தான் காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவர் தற்கொலை செய்து கொண்டது பற்றி மிக உருக்கமாக பேசி இருந்தார்.

pavni amir-updatenews360

அது ஷோ பார்ப்பவர்கள் எல்லோரையுமே கலக்கமடைய வைத்தது. அதற்கு பிறகு அதே ஷோவில் வைல்டு கார்டு என்டிரியாக வந்த டான்ஸ் மாஸ்டர் அமீர் என்பவர் பாவனியிடம் தனது காதலை சொன்னார். ஆனால் பாவனி அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

pavni amir-updatenews360

இதனிடையே, பாவனி மற்றும் அமீர் இருவரும் ஜோடியாக பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நடனம் ஆடியபோது, அவர்களது நெருக்கத்தை பார்த்து இருவரும் காதலிக்க தொடங்கிவிட்டார்களா என்கிற கேள்வியை தான் நெட்டிசன்கள் கேட்டு வந்தனர்.

இவர்களுடைய காதல் நாளுக்கு நாள் வலுவாகி கொண்டே செல்லும் நிலையில், காதலை கூறிய விஜய் டிவி செட்டிலேயே திருமணத்தையும் தடபுடலாக நடத்தி விட்டது அமீர் – பாவனி ஜோடி. இதனால் நெட்டிசன்கள் பலரிடையே பேசு பொருளாக இந்த ஜோடி காணப்பட்டது. டான்ஸ் நிகழ்ச்சியில் நடைப்பெற்ற இவர்களது திருமணம் குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வந்தது.

pavni amir-updatenews360

பல சர்ச்சைகளை தொடர்ந்து திருமணம் குறித்து முக்கிய நிகழ்வொன்றில் பேசும் போது பாவனி, “தன்னுடைய முதல் கணவரை மறக்கமுடியவில்லையெனவும், அமீர் தன்னுடன் இருப்பது மகிழ்ச்சியாக இருப்பதாகவும்” ஒரு குழப்பமான பதிலை கூறியிருந்தார்.

pavni amir-updatenews360

இந்நிலையில் தற்போது இருவரும் வெளிநாட்டிற்கு செல்லும் போது எடுக்கபட்ட புகைப்படத்தை “துபாய்” என குறிப்பிட்டு வெளியிட்டுள்ளனர். இதனை பார்த்த ரசிகர் வட்டாரங்கள் “திருமணத்திற்கு முன் ஹனீமூன் செல்கிறார்கள்” என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள் இவர்களின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலானது. தற்போது அங்கு எடுத்து கொண்ட புகைப்படங்களை இணையதளத்தில் பகிர்ந்துள்ளனர்.

amir pavni - updatenews36y0
amir pavni - updatenews36y0
amir pavni - updatenews36y0
amir pavni - updatenews36y0
  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 747

    2

    1