இயற்கையான முறையில் நிரந்தரமாக தலைமுடியை ஸ்ட்ரெயிட்டன் செய்ய ஐந்து வெண்டைக்காய் போதும்!!!
Author: Hemalatha Ramkumar9 November 2022, 7:14 pm
பல பெண்கள் இன்று நேரான தலைமுடிக்காக ஏங்குகிறார்கள். ஒரு சிலருக்கு இது இயல்பாக அமைந்தாலும், பலர் இதனைப் பெற செயற்கை வழிகளை நாடுகின்றனர். செயற்கை என்று சொல்லும் போது அது இரசாயனங்கள் மூலம் பெறப்படும் போது தலைமுடிக்கு ஏராளமான சேதங்களை விட்டுச்செல்லும். இதனால் நீங்கள் உங்கள் தலைமுடியை இழக்க கூட நேரலாம். இருப்பினும், கவலைப்பட வேண்டாம். பார்லருக்கு சென்று செய்யப்படும் ஸ்ட்ரெயிட்டனிங்கை (Straightening) நீங்கள் வீட்டில் இருந்தே செய்யலாம். அது எப்படி என்பதை இந்த பதிவில் காண்போம்.
தேவையான பொருட்கள்:
வெண்டைக்காய்- 5
அரிசி மாவு/சோள மாவு- ஒரு தேக்கரண்டி
எண்ணெய்- ஒரு தேக்கரண்டி
முறை:
*முதலில் வெண்டைக்காயை இரண்டு ஓரங்களிலும் வெட்டி விட்டு அதனை நன்கு கழவி நான்கைந்தாக வெட்டி வைக்கவும்.
*இப்போது அடுப்பில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் நறுக்கிய வெண்டைக்காய் சேர்த்து பத்து நிமிடங்கள் கொதிக்க விடவும்.
*பின்னர் இதனை ஆற வைத்து மைய அரைத்து, வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
*அடுத்து ஒரு கிண்ணத்தில் 4 தேக்கரண்டி தண்ணீரில் அரிசி மாவு சேர்த்து கட்டிகள் இல்லாமல் கரைத்து வைக்கவும்.
*வடிகட்டிய வெண்டைக்காய் கலவையை ஒரு கடாயில் ஊற்றி அடுப்பில் வைக்கவும்.
*இதனோடு கலந்து வைத்த மாவு கலவையை சேர்த்து கைவிடாமல் கிளறவும்.
*இரண்டு கலவைகளும் ஒன்றாக இணைந்த பின் அடுப்பை அணைத்து மீண்டும் ஒருமுறை வடிகட்டி கொள்ளவும்.
*இது ஆறியதும் உங்களுக்கு விருப்பமான தேங்காய்/ஜோஜோபா/பாதாம்/விளக்கு எண்ணெய் சேர்த்து கிளறவும்.
*கலவை இப்போது தலைமுடியில் தடவ தயாராக உள்ளது.
*முடியை இரண்டு பாகங்களாக பிரித்து கலவையை தடவி அரை மணி நேரம் கழித்து வெறும் தண்ணீரில் கழுவவும். ஷாம்பு போடக்கூடாது.
*இதனை வாரம் இரண்டு முறை செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.