நெருங்கும் தேர்தல்.. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் தேர்தல் குழு கூட்டம் : வானதி சீனிவாசன் உள்ளிட்ட சீனியர்கள் பங்கேற்பு!

Author: Udayachandran RadhaKrishnan
9 November 2022, 9:04 pm

டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜக மத்திய தேர்தல் குழுக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

குஜராத், இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் வெற்றி பெற காங்கிரஸ், பாஜக மற்றும் ஆம்ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜக மத்திய தேர்தல் குழுக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் பட்டியல் இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வானதி சீனிவாசன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் மற்றும் பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆலோசனை மேற்கொள்கின்றனர்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி