கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் அடுத்த கட்ட விசாரணை : திருப்பூரில் என்ஐஏ அதிகாரிகள் நடத்திய 3 மணி நேர விசாரணை!!
Author: Udayachandran RadhaKrishnan10 November 2022, 1:27 pm
கோவை கார் வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட உயிரிழந்த ஜமுசா முபின் உறவினரிடம் மூன்று மணி நேரமாக என்ஐஏ விசாரணை மேற்கொண்டுள்ளது.
கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக நிகழ்ந்த சம்பவத்தில் காவல்துறையினர் ஆறு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர் .
மேலும் வழக்கு என்.ஐ.ஏ போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இந்நிலையில் உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து இன்று தமிழக முழுவதும் 40க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த ஜமுசா முபினின் உறவினர் திருப்பூரைச் சார்ந்த யூசுப் என்பவரிடம் இன்று காலை முதல் என்.ஐ.ஏ போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
கோவையில் இருந்து வாடகை கார் மூலம் வந்த என்.ஐ.ஏ போலீசார் வெங்கடேஸ்வரா நகர் ஆறாவது வீதியில் உள்ள அவரது இல்லத்தில் சோதனை மேற்கொண்டு பின்பு அவரை திருப்பூர் தெற்கு காவல் நிலையம் அழைத்து வந்து மூன்று மணி நேரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.