ஆட்டோ ஓட்டிய முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி… தொண்டரின் ஆசையை நிறைவேற்ற ஆட்டோ ஓட்டியதால் அதிமுகவினர் நெகிழ்ச்சி..!!

Author: Babu Lakshmanan
11 November 2022, 9:32 am

கோவை ; அதிமுக தொண்டரின் கோரிக்கை ஏற்று முன்னாள் அமைச்சர் செயலாளர் எஸ்பி.வேலுமணி ஆட்டோ ஓட்டிய சம்பவம் அக்கட்சியினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக தொண்டர் ஒருவர் தான் புதிதாக வாங்கிய ஆட்டோவை எடுத்துக்கொண்டு கழக தலைமை நிலைய செயலாளரும், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்களிடம் ஆசி வாங்க வந்தார்.

மேலும், தான் புதிதாக வாங்கிய ஆட்டோவை ஓட்டி தனக்கு ஆசி வழங்குமாறு கேட்டுக் கொண்டார். இதையேற்றுக் கொண்ட எஸ்பி.வேலுமணி தொண்டரின் ஆட்டோவை சிறிது தூரம் ஓட்டிக்காட்டி கழகத் தொண்டனின் ஆசையை நிறைவேற்றினார்.

கழகத் தொண்டனின் கோரிக்கையை நிறைவேற்றிய கழகத் தலைமை நிலைய செயலாளர் என எஸ்பி.வேலுமணி அவர்கள் ஆட்டோ ஓட்டிய வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

  • Rajini Talk About Jailer 2 கோவைக்கு வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்… ஜெயிலர் 2 குறித்து முக்கிய அப்டேட்!