அரசு மாணவ விடுதியில் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை ; போக்சோ சட்டத்தில் தற்காலிக ஆசிரியர் கைது..!!
Author: Babu Lakshmanan11 November 2022, 4:44 pm
நாகப்பட்டினத்தில் ஆதி திராவிடர் மாணவ விடுதியில் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தற்காலிக ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
நாகப்பட்டினம் கோட்டை வாசல்படி பகுதியில் அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதி இயங்கி வருகிறது. இந்த விடுதியில் கீழ்வேளூர் தாலுக்கா காக்கழனி நுகத்தூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (28). இவர் இந்த விடுதியில் தனியார் தொண்டு நிறுவனத்தின் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் இவர் விடுதியில் தங்கி படிக்கும் 5 மாணவர்களுக்கு இரவு நேரத்தில் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் நாகப்பட்டினம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேசனில் புகார் செய்தனர்.
இதன் பேரில் இன்ஸ்பெக்டர் சந்தானமேரி வழக்கு பதிவு செய்து ஆறுமுகத்தை போக்சோ சட்டத்தின் கைது செய்தனர்.