ஆடி பண்டிகைக்காக தாய் வீட்டில் விட்டு சென்ற கணவன் திரும்ப வரவேயில்லை : காதல் கணவர் வீட்டு முன் இளம்பெண் தர்ணா!!
Author: Udayachandran RadhaKrishnan11 November 2022, 4:54 pm
காதல் கணவரை சேர்த்து வைக்க கோரி பெண் கணவரின் பெற்றோர் வீட்டின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
திருப்பூர் பாண்டியன் நகர் பகுதியில் உள்ள நல்லப்பா நகர் 3வது வீதியில் குடியிருந்து வரும் ஹரிராஜ் (வயது 28) என்பவர் நர்மதா (வயது 28) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இருவரும் கொங்கு மெயின்ரோடு பகுதியில் குடியிருந்து வரும் நிலையில் கணவரின் பெற்றோர் தன்னை கொடுமை படுத்தி வருவதாகவும் ஆடி சீருக்கு நர்மதாவின் அம்மா வீட்டிற்கு சென்று அங்கேயே விட்டுவிட்டு ஹரிராஜ் வந்துவிட்டதாகவும் கணவரின் பெற்றோர் தன்னை வாழ விடாமல் கொடுமைப்படுத்துவதாகவும் தனது கணவரை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நர்மதா புகார் அளித்துள்ளார்.
எனினும் நடவடிக்கை எடுக்கப்படாததை கண்டித்து பாண்டியன் நகரில் உள்ள ஹரிராஜ் பெற்றோர் வீட்டின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் உரிய முறையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து நர்மதா போராட்டத்தை கைவிட்டார்.