பவர் ப்ளே தான் எங்களோட டார்கெட் : டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி குறித்து பாக்., கேப்டன் வியூகம்!!

Author: Udayachandran RadhaKrishnan
12 November 2022, 4:11 pm

டி20 உலகக்கோப்பை வெற்றிக்காக தொடர்ந்து பிரார்த்தனை செய்யுமாறு பாகிஸ்தான் ரசிகர்களுக்கு பாபர் அசாம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

டி20 உலகக்கோப்பையை கைப்பற்றுவதற்கு ரசிகர்கள் தொடர்ந்து பிரார்த்தனை செய்யுமாறும் வீரர்கள் தங்கள் மீது நம்பிக்கை வைக்குமாறும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாம் கூறியுள்ளார்.

முதல் இரண்டு சூப்பர் 12 போட்டிகளில் தோல்வியடைந்த பாகிஸ்தான் அணி சிறப்பாக மீண்டு எழுச்சி பெற்றது. மெல்போர்னில் நாளை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி இங்கிலாந்துடன் மோத உள்ளது.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாபர் அசாம் கூறியதாவது:- “எங்கள் கடைசி மூன்று போட்டிகளில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டதால் நான் பதட்டத்திற்கு பதிலாக உற்சாகமாக இருக்கிறேன். அழுத்தம் உள்ளது என்பதில் சந்தேகமில்லை, ஆனால் அதை நம்மீது வைக்கும் உறுதி மற்றும் நம்பிக்கையினால் மட்டுமே அடக்க முடியும்.

தேசம் எப்போதுமே நமது முதுகெலும்பாக இருந்து வருகிறது. அவர்கள் தங்கள் உற்சாகத்தின் மூலம் எங்களை நிலைநிறுத்துகிறார்கள். மீண்டும் எங்களுக்கு ஆதரவளித்து தொடர்ந்து பிரார்த்தனை செய்யுமாறு அவர்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.

பாகிஸ்தான் அணியில் இறுதிப் போட்டிக்கு எந்தவித மாற்றத்தையும் செய்ய வாய்ப்பில்லை. நம்பகமான விளையாட்டுத் திட்டத்திலிருந்து மாற மாட்டோம். இறுதிப் போட்டியில் வெற்றிபெற எங்கள் வேக தாக்குதலை எங்கள் பலமாகப் பயன்படுத்துவோம்.

பவர்பிளேயில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றுவது போட்டியில் வெற்றி பெற இன்றியமையாததாக இருக்கும் இவ்வாறு கூறினார்.

  • pa ranjith in the discussion of directing palwankar baloo biopic பிரபல கிரிக்கெட் வீரரின் பயோபிக்கை இயக்கும் பா.ரஞ்சித்? ஆச்சரிய தகவல்