நயன்தாராவை ஓரங்கட்டிய பிரபல நடிகை… 3 வருஷத்துக்கு கால்ஷீட் கிடையாது : ஷாக் ஆன முன்னணி நடிகைகள்!!
Author: Vignesh13 November 2022, 5:15 pm
நயன்தாராவுக்கு திருமணம் ஆகிவிட்டதால் அடுத்த லேடி சூப்பர்ஸ்டார் ஆகும் நோக்கத்தில் தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறீர்களா என்கிற கேள்வி ஐஸ்வர்யா ராஜேஷிடம் முன்வைக்கப்பட்டது.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், தொடர்ந்து நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். குறிப்பாக நயன்தாராவுக்கு அடுத்தபடியாக ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் அதிக நடிக்கும் நாயகி என்றால் அது ஐஸ்வர்யா ராஜேஷ் தான். தற்போது இவர் கைவசம் சொப்பன சுந்தரி, டிரைவர் ஜமுனா, கிரேட் இந்தியன் கிச்சன் என ஏராளமான கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் படங்கள் உள்ளன.
அந்த வகையில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள டிரைவர் ஜமுனா திரைப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தை கிங்ஸ்லின் இயக்கி உள்ளார். இப்படத்தில் கால் டாக்ஸி டிரைவராக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். இப்படம் வருகிற நவம்பர் 11-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இப்படத்தின் பிரஸ் மீட் சென்னையில் இன்று நடைபெற்றது.
அதில் கலந்துகொண்ட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், பத்திரிகையாளர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். குறிப்பாக அவரிடம், “நயன்தாராவுக்கு திருமணம் ஆகிவிட்டதால் அடுத்த லேடி சூப்பர்ஸ்டார் ஆகும் நோக்கத்தில் தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறீர்களா என்கிற கேள்வி முன்வைக்கப்பட்டது.
இதற்கு பதிலளித்து ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியதாவது : “இதென்ன வம்பா இருக்கு. நான் எதையும் பிளான் பண்ணி பண்ணல. எப்பவுமே லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தான். ஹீரோ வேண்டாம்னு நான் முடிவு பண்ணி நடிக்கல. நல்ல கதை உள்ள படங்களில் நடிக்க விரும்புகிறேன். இந்த மாதிரியான கதைகள் அமைவதால் தொடர்ந்து அவ்வாறு நடித்து வருகிறேன். லேடி சூப்பர்ஸ்டார் ஆகனும் என்கிற பிளானுடன் நான் அப்படி செய்யவில்லை. அந்த எண்ணமும் எனக்கு இல்லை” என கூறியுள்ளார்.
தற்பொழுது இவர் கைவசத்தி ல் 15 திரைப்ப டங்கள் இருக்கின்றது. அடுத்த மூன்று வருடத்திற்கு ஐஸ்வர்யாராஜேஷ் கால்சீட் கிடைக்காம ல் தயாரிப்பாளர்கள் இருந்து வருகின்றார்கள். இதன் காரணமாகவே அடுத்த நயன்தாரா நான் தான் என்று கூறியதாக கோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகின்றது.