ஆமை வேகத்தில் நடக்கும் பாலப் பணிகள்… சேரும், சகதியில் வாழை கன்று நட்டு மார்க்சிஸ்ட் கட்சியினர் நூதன போராட்டம்..!!
Author: Babu Lakshmanan14 November 2022, 11:36 am
திண்டுக்கல் ; ஆமை வேகத்தில் நடைபெறும் பாலத்தை உடனடியாக முடிக்க வலியுறுத்தி தேங்கியுள்ள தண்ணீரில் வாழை கன்று நட்டு வைத்து கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
திண்டுக்கல் மாநகராட்சியில் இருந்து பாலகிருஷ்ணாபுரம் வழியாக புகையிலைப்பட்டி, மலைக்கேணி பெரிய கோட்டை உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பகுதிகளுக்கு செல்லும் சாலையில் கடந்த 10 வருடங்களாக மேம்பால பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது.
அதே போல், தற்போது தொடர் மழை காரணமாக பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சி பகுதிகளுக்கு செல்லும் பாதைகள் அனைத்தும் சேரும் சகதியுமாக உள்ளதால், இன்று காலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி அவர்கள் தலைமையில் வாழைக்கன்றுகள் நடும் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தின் போது ஆமை வேகத்தில் நடைபெறும் பாலத்தை விரைவாக முடித்து தர வேண்டும் என்றும், தண்ணீர் தேங்காத வண்ணம் சாலைகளை வராமத்து செய்ய வேண்டும் எனக் கூறி போராட்டம் நடைபெற்றது