10 வருட திருமண வாழ்க்கை..! காதல் கணவர் பிரசன்னாவை விவாகரத்து செய்யும் சினேகா?.. இந்த புகைப்படம் கூறும் உண்மை என்ன?

Author: Vignesh
14 November 2022, 5:45 pm

புன்னகை அரசி சினேகாவும், நடிகர் பிரசன்னாவும் காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2012ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். அவர்களுக்கு ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள்.

குடும்பத்துடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்து வருகிறார்கள் சினேகாவும், பிரசன்னாவும்.

sneha prasanna - updatenews360

இந்நிலையில் சினேகாவுக்கும், பிரசன்னாவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு பிரிந்து வாழ்கிறார்கள் என்றும், விரைவில் விவாகரத்து பெறப் போகிறார்கள் என்றும் ஒரு தகவல் வெளியானது.

நல்லா இருந்த குடும்பம் இப்படியாகிவிட்டதே என்று ரசிகர்கள் வேதனை அடைந்தார்கள். இந்நிலையில் தானும், பிரசன்னாவும் ஒரே நிறத்தில் உடை அணிந்து எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு, விவாகரத்து எல்லாம் இல்லை, நாங்கள் நன்றாக இருக்கிறோம் என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டார் சினேகா.

sneha prasanna - updatenews360

அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த பிறகே ரசிகர்கள் நிம்மதி அடைந்தார்கள். சினேகாவும், பிரசன்னாவும் ஒற்றுமையாக இருப்பது பிடிக்காமல் யார் செய்த வேலை இது என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

sneha prasanna - updatenews360

கெரியரை பொறுத்தவரை சினேகா நடிப்பில் கடைசியாக வெளியான படம் பட்டாஸ். அந்த படம் கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் தியேட்டர்களில் ரிலீஸானது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 964

    0

    1