விஜய்யுடன் 21 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்த பிரபல நடிகை : எல்லாமே ‘வ’ வரிசையிலேயே அமைஞ்சிருக்குப்பா!!

Author: Udayachandran RadhaKrishnan
14 November 2022, 3:58 pm

பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி படிபல்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துக் கொண்டிருக்கும் திரைப்பபடம் ‘வாரிசு’. ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்திருக்கும் இந்தப் படத்தில் பிரபு, பிரகாஷ்ராஜ், சரத்குமார் என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது.

அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக வரும் இப்படத்தின் அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. அண்மையில், இந்த படத்தில் விஜய் பாடி இருக்கும் ‘ரஞ்சிதமே ரஞ்சிதமே’ பாடல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

தற்போது, படத்தின் டீசர் குறித்த தகவல் லீக்காகியுள்ளது. பொங்கல் விருந்தாக வர இருக்கும் வாரிசு படத்தின் டீசரை, டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டிருக்கிறதாம்.

ஏற்கனவே பல காட்சிகள் லீக்காகியிருப்பதால், இனி அப்படி நடக்கக்கூடாது என்பதில் கறாராக இருக்கும் வாரிசு படக்குழு, டீசர் ரிலீஸூக்கு பெரும் விளம்பரம் செய்யவும் முடிவெடுத்திருக்கிறாராம். அதற்கு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூவும் கிரீன் சிக்னல் கொடுத்திருக்கிறார்.

இதனிடையே படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை சினேகா நடிக்கிறார். விஜய்யுடன் வசீகரா படத்தில் மட்டுமே நடித்த அவர், தற்போது வாரிசு படத்தில் இணைந்துள்ளார்.

  • director entered van when shalini pandey changing dress உடை மாற்றும் அறையில் திடீரென நுழைந்த இயக்குனர்! அதிர்ந்துப்போன ஷாலினி பாண்டே… ஒரு அதிர்ச்சி சம்பவம்!