பள்ளி முடிந்து மகன், மகளை வீட்டிற்கு அழைத்து சென்ற சித்தப்பா : மின்னல் தாக்கி மூவரும் பலியான பரிதாபம்!!
Author: Udayachandran RadhaKrishnan14 November 2022, 8:55 pm
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகாவிற்கு உட்பட்ட திருப்புனவாசல் காவல் சரகத்தில் உள்ள பறையத்தூர் கிராமத்தை சேர்ந்த இளையராஜா (வயது 38).
இவர் தனது அண்ணன் மகன் சஞ்சய் (வயது 18), சஞ்சனா (வயது 16) ஆகியோரை திருப்புனவாசலில் இருந்து பள்ளி முடிந்து இளையராஜா அவரது இரண்டு சக்கர வாகனத்தில் சொந்த கிராமமான பறையத்தூர் அழைத்து சென்றார்.
அப்போது செல்லும் வழியில் மின்னல் தாக்கி அதே இடத்தில் மூவரும் இறந்தனர். அதில் இளையராஜா என்பவர் திருப்புனவாசலில் ஹோட்டல் நடத்தி வருகின்றார்.
அவரது அண்ணன் மகன் 12 ஆம் வகுப்பு அண்ணன் மகள் பத்தாம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்த தகவல் அறிந்து அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் அவர்களை மீட்டு திருப்புனவாசல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
அவர்களை பரிசோதித்த மருத்துவர் அவர்கள் மூவரும் இறந்துவிட்டனர் என்று தகவல் அறிந்து அவர்கள் மூவர் உடலையும் மனமேல்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து திருப்புனவாசல் காவல் துறையினர் வழக்கு பதிவுசெய்துள்ளனர்.